பரிவாரமுடனே எல்லாளன் வந்து
இறங்கினான் அன்று இலங்கைத் துறையில்
படைகளை நகற்றி வருகின்ற போது
இடையிலே கண்டான் எம்மூர் தன்னை
மருத மரங்களின் விரியுடை சேனையை
பெருமன்னன் கண்டு தாகம் தணிய
தண்ணீர் அருந்தி களைப்பது நீங்கி
பூத்துக்குலுங்கி பூ மணம் வீசி
மாங்குயில் பாடி மகிழ்ந்திடும் ஊரில்
ஆத்தம் கரையில் அழகிய மருத நிழலில்
களைத்துக் கிளைத்து கடு நடை நடந்து
வந்த தன் சேனையை குலைந்து போகாமல்
கொண்டு வந்து மருத நிழலில் வைத்தான்
அன்று மருத மர நிழலில் சேனையை வைத்ததால்
மருதடிச் சேனை என்ற பேர் வந்தது
அன்று மருதடிச்சேனை என்று வழங்கிய அப்பேர்
குன்றிக் குறுகி சேனையூராகி சென்றன பலகாலம்
ஊரும் பேரும் கூறாய்பிரிந்து வரலாறு மாறி
மண்ணில் புதைந்து துருவங்களாகி தொலைந்துபோனது
வரலாறு காட்டிய சின்னங்களெல்லாம்
தீயில் எரிந்து தீய்ந்து போனது
ஏட்டிலும் பாட்டிலும் சேர்க்கலாம் பார்க்கலாம்
மருதடிச்சேனை வர்ணகுல வினாயகரே
ஆடி ஊஞ்சல்பாட்டிருக்கு பாக்கேலா இன்று
பழைய உறுதிகளை பார்ப்பம் கொஞ்சம்
பதினஞ்சாம் ஆண்டு பழைய உறுதியில்
மருதடிச்சேனை என்று பேர் வந்தது ஏனோ
சேனையூர் என்ற பெயர் வந்தது ஏனோ
சேனையூர் மெதடிசன் பள்ளியில்
பாட்டன் பூட்டன் படித்தது உண்மை
மருதடிச்சேனை பொலிஸ் விதான் என்று
விளம்பரப்பலகை விளங்கியது அன்று
உண்மை பொய்யாய் உருமாறிப்போச்சு
பொய்மையில் உலகம் பூத்துக் குலுங்குது
வரலாறு என்றும் மடிந்து போகாது
நேர்மைகள் என்றும் நெளிந்து போகாது viluppaddu veerasingam
No comments:
Post a Comment