அனாமிகா
சுனாமியில் கரைந்த சோக மலர்
எண்ணங்களில் எப்பொழுதும்
வண்ணமாய் வந்து விழும் அழகு தேவதை
ஆயிரம் கனவுகளுடன் வாழ்ந்த
அற்புதம்
ஒவ்வொரு நாள் கடக்கும் போதும்
அவள் நினவை கடக்க முடியாமல்
கண்களும் மனமும்
மெளனத்தின் வழியாய்
அவள் நினைவை கடக்க முயல்கின்றன
எப்படி கடக்க முடியும்
ஒவொரு அசைவிலும்
அவள் முகத்தின் வாசனை
முகர்ந்து முகர்ந்து
நான் மூர்ச்சித்து போகிறேன்
தேட தேட
தெவிட்டாத அவள் நினைவு
பாட பாட
படர்ந்து விரியும் அவள் நினவு
மார்கழி மாதம் நெருங்க நெருங்க
அவள் வரவுக்காய் மனம்
புதிய புதிய பரிமாணங்களை
தேடி அலைகிறது
கண்ணகி
வைகாசித் திங்களில் வருவேன்
என வரம் கொடுத்ததை போல
மார்கழித் திங்களில் வருவேன்
உங்கள் மனங்களில் நிறைவேன்
என்ற வரம் எங்களுக்கு
மாதங்களில் அவள் மார்கழியாக
பொங்கு மடுவில் புகப் பாய்ந்து பாய்ந்து
நீராடுகிறாள்
அவள் நீராட்டத்தில்
எங்கள் நினைவும் கலந்து
தேரொட்டமாய் நீண்டு செல்கிறது
அவள் வருவாளா
என மனம்
ஒவ்வொரு கணமும்
நினவு நெஞ்சை முட்டுகிறது
எத்தனை யுகங்கள் கடந்தாலும்
என்றும் அவள் நினைவு
அந்த தேவதையின் வரவுக்காய்
காத்துக் கொண்டிருக்கிறேன்
Monday, 27 September 2010
Sunday, 26 September 2010
தேடுகிறேன்
தேடுகிறேன் .........
ரூபாய்க்குள் கிடைத்த சந்தோசம்
ஸ்டர்லிங் பவுணுக்குள்
தொலைந்துபோன நாட்கள் ...........
கருப்பு அழகிகள்
ஓரப்பர்வையிலே உயிருரசிப்போன
வெள்ளை குமரிகள்
அரைகுறை ஆடைக்குள் ..........
வேர்வையில் குளித்து
வெறுந்தரையில் சயனம்போய் ......
போர்வையில் ஒளிந்துகொண்ட
பொய்யான வாழ்க்கைக்குள் ................
ஊர்வம்பும் ஊர்துரட்டும்
வேலியால் எட்டிப்பேசி .........
பிளட் வாழ்க்கை
ரெடிமட் சிரிப்பில் ...........
தேடுகிறேன் ..........
நாட்டுக்கோழி நண்டுக்குழம்பு
மாட்டிரச்சியும் சூட்டிரச்சியும்...........
என்றோ அடக்கமான
"சவகாம்பரா" deep ப்ரீசர் .......................
ரத்தம்சிந்த சண்டையிட்டோம் ....
கட்டித்தழுவி உணர்ந்துகொண்டோம்
ரத்தமுருஞ்சி முதுகில்குத்தும்.....
தவித்தமுலயல் அடிக்கும் கூட்டம் ......
தேடுகிறேன் ......
ஆனால் எனக்குத்தெரியும் ...
நான் தொலைத்தது ....
குளத்திலில்லை
சமுத்திரத்தில் ..
Saturday, 25 September 2010
யாதும் ஊரே யாவரும் கேளீர்..
யாதும் ஊரே யாவரும் கேளீர்..!
கால் நீட்டிப்படுக்க
ஒரு பலகைத் துண்டு…
காலை உணவுக்கு இரண்டு
...ரொட்டித் துண்டு..
காற்று வராத அகதிக் கொட்டில்
வெளிச்சம் வரக் குப்பி விளக்கு.
மாதம் ஒரு முறை கூப்பன் அரிசி
மலிவுக்கறிக்கு வெண்டிக்காய்
மனது நிறைய ஊர்க்கவலை
இத்துடன் முடிந்து விடகிறது
வாழ்தல் மீதான ஆசை..!
நேற்றய பௌர்ணமிப் பொழுதில்
புத்த பெருமானுக்கு
பெரு விழா எடுத்தது எங்கள் தேசம.;
நாட்டில் சமாதானத்தையும்
சமத்துவத்தையும் ஏற்படுத்தியதால் புத்த பெருமானுக்கு
போதி பூஜை..!
ஆறு மணிக்கே தேசியக்கொடி
காற்றில் பறந்தது.
பூஜையின் முடிவில்
பலர் பேசிக் கொண்டணர்
எல்லோரும் இனிச்சமம்
யாதும் ஊரே யாவரும் கேளீர்..!
நேற்று பௌர்ணமி போயிற்று
இன்றய காலையிலும்
என் கண்களில் பட்டவை….
கால் நீட்டிப்படுக்க
ஒரு பலகைத் துண்டு….
காலை உணவுக்கு இரண்டு
ரொட்டித் துண்டு….
காற்று வராத அகதிக் கொட்டில்….
வெளிச்சம் வரக் குப்பி விளக்கு…!
ப. சுஜந்தன்

Monday, 20 September 2010
Wednesday, 15 September 2010
ஆழியாள்
ஆழியாள்
பெயர்: மதுபாஷினி
புனைபெயர்: ஆழியாள்
பிறப்பிடம்: திருகோணமலை
வசிப்பிடம்: அவுஸ்திரேலியா
தொடர்புகளுக்கு:
முகவரி: மதுபாஷினி
20 Dulverton Street, Amaroo, Canberra ACT2914, Australia
Tel: 61262418183
E.mail: aazhiyaal@hotmail.com
படைப்பாற்றல்: கவிதை, மொழிபெயர்ப்பு, விமர்சனம்
படைப்புகள்:
கவிதைத் தொகுப்புகள்:
* உரத்துப் பேசு - 2000
* துவிதம் - 2006
சிறுகதைத் தொகுப்பு:
* கொட்டியாரக் கதைகள்
இவர்பற்றி:
* இவர் யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் ஆங்கில விரிவுரையாளராக ஐந்து வருடங்கள் பணிபுரிந்தவர். அவுஸ்திரேலியா நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுமாணிப் பட்டப் படிப்பைப் பெற்றுள்ளார். இவரது கவிதைகள் மலையாளம், கன்னடம் ஆகிய இந்திய மொழகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மூன்றாவது மனிதன், கணையாழி, சரிநிகர், ஆறாம்திணை, தோழி, உயிர்நிழல், அம்மா, பெண் ஆகிய இலக்கியச் சஞ்சிகைகளில் இவரது ஆக்கங்கள் வெளிவருகின்றன

உணர்வலைகளின் தூரிகைத் தீட்டல் அன்பாதவன்
அன்பாதவன்
வாழ்க்கை சில நேரங்களில் மிகக் கொடுமையானது. வாழ்வின் நியதிகளோ மிகக் கடுமையானது. தம் சொந்த மண்ணை உறவுகளை பழகியப் பிரதேசங்களை விட்டு விலகி புலம்பெயர்ந்து வாடும் வாழ்க்கை துயரங்களிலும் சோகமானது.
ஈழ மக்களோ சாபத்தையே வரமாய் வாங்கி வந்தவர்கள். உறவுகளை, ஊரை, எல்லாவற்றையும் உதறி, உயிர்வாழ்தல் எனும் நோக்கத்தோடு இதயத்தை ஈழத்திலும் உடலை மட்டுமே உலக நாடுகளில் ஏதாவதொன்றிலுமாய் வாழும் வாழ்வு வாழ்வாகாது.
இத்தகைய சூழலிலும் உயிர்த்துடிப்புள்ள இலக்கியங்களை உருவாக்குவதில், ஈழத் தமிழ் படைப்பாளிகளே முன் நிற்பதை மறுக்க வியலாது எவராலும்.
ஆழியாள் அப்படி ஒரு படைப்பாளி! வேற்று வெளியில் வாழ்ந்தாலும் (!) தனது பூர்வீகம் குறித்த பதிவுகளையும், சமகால வாழ்வியல் சூழலையும் கவிதைகளாய்ப் படைப்பதில் சமர்த்தர் என்பதை நிரூபிப்பதாய் துவிதம் கவிதைத் தொகுதி துவிதம் என்ற சொல்லுக்கு இரண்டு, இருமை எனப் பொருள் தருகிறது அகராதி. தனது இரண்டாவது தொகுப்பென்பதால் துவிதம் எனப் பெயரிட்டிருப்பாரோ ஆழியாள்!
“துவிதம் தொகுப்பில் இடம் பெற்ற கவிதைகளில் பெரும்பாலானவை ஆஸ்திரேலியா, வாழ்புலத்தில் உருவானவை. இருப்புக்கும் வாழ்வுக்கும் இடையில் எதிர்வினை புரியும் எழுத்து தன்னளவில் தனக்கேயுரிய தர்க்க முறை அறிதல் முறைகள் மொழியைக் கண்டமையும் அனுபவங்களை அணுகும் கோணமும் தனித்துவமாக வெளிப்படும். இந்த நீதியில் ஆழியாள் கவிதைகள் புதியத் தன்மைகளைக் கொண்டிருக்கின்றன” என முன்னுரைக்கும் மது சூதனனின் வார்த்தைக் கவனங்களோடு துவிதம் தொகுதிக்குள் நுழைபவருக்கு காத்திருக்கின்றன புதிய கவியனுபவங்கள்!
‘கலங்கரை விளக்கத்து / இரவுக் காவலாளியாகவும்
ஆறடிக் குழியுள் / மௌனம் புடைசூழ இறக்கப்பட்ட
பிணமொன்றைப் போலவும் / தனித்தே
மிகத் தனித்தே இருக்கின்றேன்’
என தன்னிலை விளக்கம் அளிக்கும் கவிஞரின் மனநிலையை வாசகன் எளிதாய்ப் புரிந்து கொள்ளவியலும்! எத்தனை பெரிய தேசத்திலும் நம்மைப் பகிர ஆளில்லாவிடில் தனிமை! கொடுமையான தனிமை!
‘அந்த யாரோ யாராயிருக்கும்
ஆணா பெண்ணா அடுத்தபாலா
யாரோவை யார்
வேலை ஏவியது
யாரோவுக்கு சம்பளம் கொடுப்பது யார்?
அது எவ்வளவு? போதுமா?’
அந்த யாரோ தான் இத்தகைய பிரசனைகளுக்கும் காரணம்! இணைந்து வாழ விரும்பும் ஈழ சிங்கள இன மக்களை மொழியின் பெயரால் பிரிப்பது யாரோ! ஷெல் வீச்சுகளினால் புகலிடம் தேடி ஓட வைத்தது யாரோ!
சமாதானத்தின் காலத்தில் பூமியைத் தோண்ட எலும்புகளே கிடைக்கும் தேசத்தில் கவிதை அழகியலும் மரணம் சார்ந்ததாகவே இருக்கும்!
‘கடை இரு
வெறும் நூற்றாண்டுகளின் மேல்
அரிதார நிலம் பூசி
நட்சத்திரங்கள் ஓர் ஆறை
அள்ளி அதில் தெளித்து
உச்சிக் கம்பத்தில் பறக்க விட்ட
வெள்ளை விளை நீலம் இது’ என தான் வாழும் கங்காரு தேசத்தை காட்சிப்படுத்தினாலும் ஆழியாளுக்கு தான் யார் .... தன் நிலை என்ன என்பது புரிந்தே இருப்பதை பதிவு செய்யும் வரிகளிவை!
‘பிறந்த வீட்டில் கறுப்பி
அண்டை நாட்டில்
சிலோன் அகதிப் பொண்ணு
இலங்கை மத்தியில்
தெமள
வடக்கில் கிழக்கச்சி
மீன் பாடும் கிழக்கில்
நானோர் மலைக்காரி
மலையில்
மூதூர்க் காரியாக்கும்
ஆதிக்குடிகளிடம்
திருடப்பட்ட தீவாயிருக்கும்
என் புகுந்த நாட்டில்
அப்பாடா!
பழையபடி நான் கறுப்பியானேன்! ’
புலம்பெயர்ந்து புகுந்த தேசத்தின் அரசியல் விளையாட்டுகளையும் விமர்சனம் செய்யும் போது ஆழியாள் உள்ளிருக்கும் கவிஞர் மிக யதார்த்தமாக வெளிப்படுவது சிறப்பு.
உளைச்சலில் தவிக்கும் மனநிலையிலும் ‘அந்தி’யை ‘முன்னிரவுக் குயில் கிட்ட முட்டை பொறிகிறது.’ என அழகியலோடு வெளிப்படுதல் கவியுணர்வு கொண்டவர்களுக்கே சாத்தியம்.
தானறிந்த, தானுணர்ந்தவற்றை கவிதைகளாக செதுக்கியிருக்கும் ஆழியாளின் சிறப்பு சொற்சிக்கனம்! மிகச் செறிவாக தேர்ந்தெடுத்த வார்த்தைகளைக் கொண்டு கவிதை நெய்திருக்கும் ஆழியாள் அந்த முயற்சியில் வெற்றி பெற்றிருப்பதையும் பதிவு செய்யத் தான் வேண்டும்.
புலம் பெயர் ‘வாழ்வு என்பது சுயம் குறுக்கி வாழ்வது! வாழ்வது’ என்று சொல்வது கூட நேர்மையாகாது! இருப்பது(ஒதண்t ஆஞுடிணஞ்) அத்தகைய இருப்பில் உணர்வலைகளின் வேகத்தோடு யதார்த்தம் மோதும் போது ‘காமம்’ போன்ற கவிதைகள் பிறக்கத்தான் செய்யும்.
‘உயரும்
மயைடிவார மண் கும்பிகளுள்
திணறி அடக்கமுறும்
மனித மூச்சுகளும்
பள்ளங்களின் ஆழப்புதைவில்
அலறி ஓயும் குரல்களின்
இறுதி விக்கல்கலும் உண்டு இங்கு
அவருக்கு செவிகள் உண்டு
இருளுக்கு கூர் விழிகளும் உண்டு
பீறிக் கசியும் ரத்தமாய் மேலும்
உண்டு இன்னொன்று
அவனுக்கு .’
உள் நாட்டு யுத்தம், ஈழப் படைப்பாளிகளின் படைப்பாக்கத் திறனை திசைமாற்றி விட்டதை பல்வேறு புலம் பெயர் நூல்கள் பறைசாற்றுகின்றன.
‘சுருங்கிய வெறுங்கைகளே
வெம்பி அல்லாடிச் சொல்லப்
போதுமானதாய் இருந்தன
வேண்டாம் போர் என்று,’
துப்பாக்கி முனையில் அதிகாரம் பிறக்கும்! கவிதை பிறக்குமா? அன்றி துவக்குகள் தான் கவிதை ரசிக்குமா? விமான நிலைய சந்திப்பில், உறவுகளைக் கண்டு கவிதை எழுதி ஆற்றுப்படுத்திக் கொள்ள வேண்டியது தான்! வேறென்ன இயலுமிப்போது ...?
துவிதம் (கவிதைகள்),
ஆழியாள்.
ஆழியாள் படைப்கள்
பயணம்
காலையில் இரண்டு ரொட்டிகளைத் தின்ன கெலி இருந்தும், ஒன்றைச் சாப்பிட்டு வேலைக்குப் புறப்பட்டேன்.
என்னைப் பொறுத்தவரை வேலைக்குப் போகும் படலம் என்பது பரீட்சைக்குப் படிக்கும் போது ஏற்படும் உணர்வு புரிந்தும், புரியாததும் இருக்கும். போகாது நிற்கலாம் என்ற யோசனை எட்டிப்பார்க்கும். சீ... இதென்ன கோழைத்தனம் என உட்குரல் கேட்கும். இறுதியில் நடப்பது நடக்கட்டும் ~நீ உன் கடமையைச் செய்| என்பதன் உள்ளார்ந்த பொருளுணர்ந்த மோன நிலையில் கிளம்புவேன்.
முன்னறை வாசலில் இருந்து கேட்வரை சைக்கிளை உருட்டி வருவதற்கு 80 அல்லது 84 அடிகள் எடுத்து வைக்க வேண்டும். அப்படியே சைக்கிளின் முன் ரோதையை கேட்டில் முட்டவைத்து அதன் கொழுக்கியை ~ணங்| கென்று எடுத்து சைக்கிளை இடமாய் தினுசாக வளைத்து கேட்டின் இரும்புக் கேடர்களில் கால்கள் கிழிபடாது வெளியே வந்தால் சுறாவிடம் இருந்து தப்பித்த சுகானுபங்கிட்டும.;
பின்னர் பின் ரோதையை கணக்கெடுத்தவாறு கேட்டில் முட்டியும், முட்டாததுமான துறவு நிலையில் சைக்கிளை நிற்பாட்டி கொக்கியை மாட்டுவேன் - ~ணங்| என்று வேறோர் சுருதியில் ஒலிக்கும்.
செம்மண் வீதி.
சைக்கிளின் இருக்கையை ப்ஊ..... ப்ஊ...... என்றெல்லாம் ஊத உகந்த இடம். அப்பா தன் முகத்தில் அன்றாட அலுவல்கள் முடிந்ததும் ~சேவிங் செட்டை| ஊதுவதும் இப்படித்தான்;. அதில் கொர்...சர்... என்ற வேற்றொலிகளும் கலந்திருக்கும். என்னதில் கலப்பிருக்காது. சுத்த பஞ்சமத்தில் வரும் ப்ஊ..... ப்ஊ..... ப்ஊ.....
சின்னப் புதுக்குளத்து செம்மண் வீதி ரொம்பச் செழிப்பானது. வேம்பு, தேக்கு, மா மரங்களால் அடர்ந்தது. வவுனியா எங்கும் வெயில் உக்கிர தாண்டவமாடினாலும் சின்னப் புதுக்குளத்தில் அது இவ் அடர் மரங்களோடு சிரித்துக் கைகோர்த்துப்போம். மந்தைகள் தாம் இடும் பசளைகளை இங்குதான் இடுவோம் என்று சங்கல்பம் செய்ததோ என்னவோ இன்னோரன்ன வகை சாணி, புழுக்கைள் இறைந்து கிடக்கும்.
தெருவை ஒரு தரம் அளவெடுத்தவாறு சைக்கிளை இடதுபுறம் சாய்த்து வலது பெடலை தட்டி மேலே சுழற்றிக் கொண்டு வந்து விட்டு, இடக்காலை நெட்ட மரம் போல் உறுதியாய் வைத்துக் கொள்வேன். ஏலவே மேற் கொண்டு வரப்பட்ட பெடலை, வலக்காலால் இலேசாக அழுத்தியபடி, நெட்ட மரக்காலை மெது, மெதுவாய் காற்றில் உயர்த்தி இடது பெடலில் வைத்தவாறு லாவேகமாய் இருக்கையில் அமர்ந்து பெடல்களை மாறி மாறிச் சுழற்றுவேன். மோனம் கலைந்திருக்கும்.
சைக்கிளும் எனக்கேற்றபடி குதிரையாய்ச் சிறகெடுக்கும். சாணிகளுக்கிடையே லாவேகமான சுழிப்புகள், சுற்றிவளைப்புகள், வெட்டுகள் அனைத்தும் நடக்கும். எதுவும் இயலாத பட்சத்தில், குவியல்கள் மேலேயே குதிரைப் படையெடுப்புகள் நிகழும். ஒவ்வொரு குவியலின் மீதான படையெடுப்பும் அதைக் கடந்தபின் ஓயும். உடனே ஜான்சி ராணியாய் கழுத்தைத் திருப்பி என் படையெடுப்பின் தீரச்சுவடுகள் சாணக் குவியலின் நடுவே டயர் அடையாளங்களாய்த் தென்படுகின்றனவா என்பதைப் பார்த்து கணச் சிமிட்டலில் முன் திரும்புவேன். அடுத்தது படையெடுப்பா, சுற்றி வளைப்பா என்று முடிவு செய்ய ஒரு கணம் மிச்சமிருக்கும்.
செம்மண் வீதியால் வலப்பக்கம் திரும்பி வருகிற தார் ரோட்டை, ஒரே தாவலில் கடந்து பெரிய கல் ரோட்டுக்குள் நுழைவேன். முழுவதும் நொறுங்காத கருங்கற்களால் ஆன பாதை இது. இதற்குள் நுழைந்து வெளியேறும் என் வாகனத்துக்கு ~டொக் டொக்| குதிரை அனுபவம் மறுத்தாலும் கிட்டும். பெரிய கல் வீதியைத் தாண்டுகையில் பொருட்கள், பொத்தான்கள், உதிரிப்பாகங்கள் இருக்கின்றனவா என்ற தேடல்களும், அடையாளப்படுத்தல்களும் தினப்படி நிகழ்வு.
அதைக் கடந்து இடப்புறம் திரும்ப, வருவது ஹொரவப்பொத்தானை ரோட்டு. வீதியின் பெயர் வாயில் கெழுத்தி முள்ளு மாதிரிச் சிக்கும். மற்றப்படி நேர்வழி. பள்ளங்கள் சாதாரணம். சிலவற்றை அவசரத்துக்கு பங்கர்களாகவும் பாவிக்கலாம்.
இந்த ஹொரவப்பொத்தானை ரோட்டில் அதிக கவச வாகனங்கள் எதிரே ஊர்ந்து வரும். அப்பிடியான சோம்பேறிகளை எனக்கும் என் நேசப்படை சைக்கிளுக்கும் பிடிப்பதில்லை.
ஆவேசக் கோபத்தில் ~டிரிங் டிரிங்டிரிங்| என்று உரத்துச் சுட்டபடி போவோம். எம் சக்கரங்கள் உருளும். அருகே யோசப் காம்பில் இருந்து ஷெல் வேட்டை நாய்கள், முல்லைக்கு ஓடுவதையும் அவற்றை ஹெலிகள் விட்டுத் துரத்துவதையும் கண்காணித்தபடி எம் சக்கரங்கள் உருண்டோடும். ரோஜர் மூரைப் பார்த்ததிலிருந்து அசையும் ஹெலியை ஒற்றைக் கையால் எட்டிப் பிடித்து ஏற எனக்கும் ஆசைதான். என்றாலும் எனது சைக்கிளின் நேசத்தை இழக்கத் துணியாது ஆசையை அடக்கிக் கொள்வேன். அதன் விளைவு வீதியில் எதிராளிகள் இல்லாவிட்டாலும் மேலும் மூன்று தடவைகள் ~டிரிங் டிரிங்டிரிங்| என்று கண்ணை மூடிக்கொண்டு சுட்டுத்தள்ள வேண்டியிருக்கும்.
இவ்வாறு எங்கள் கூட்டுப் படை முன்னேறிச் செல்லுகையில் இடப்பக்கமாக உள்ள மன்னார் வீதி கண்ணில் நேராய் விரியும். இம் மூன்றாங் கட்டப் போர் முனையில் திட்டமி;ட்டபடி வேகங் குறைத்து நிதானமாய், மழைகாலத்துப் படையணியின் சாணக்கியத்தோடு நாங்கள் நகருவோம்.
இன்றும் பல சீவன்கள் வேலைக்குச் சென்று கொண்டிருக்கின்றன. பாதைகள் குறுக்கும் நெடுக்குமாய், வளைந்தும் நேராயும் சந்து பொந்துகளோடு கிடக்கின்றன. ஒவ்வொருவரும் தனக்கிசைந்ததோர் வாகனத்தில் பயணிக்கின்றனர். சிலர் நடையில்.
என்றாலும் எங்கள் முகங்களின் மேல் வாயுக்கவசங்கள் துருத்திக் கொண்டிருக்கின்றன. சோறு இருந்தென்ன? சுதந்திரக் காற்றில்லையே. அதுதான் இந்த முகமூடிக் கோலம.;
என்றாயினும் குறுக்கும் நெடுக்குமாய்க்; கிடக்கும் இந்த ஒற்றையடிப் பாதைப் புதிரை, விடுவிக்க எம் ஒருவருக்காவது முடியாமற்; போய் விடுமா என்ன?
அப்போது தென்றலாய்க் கீற்றுக்களிடையே தவழ்ந்து, சிலுசிலுத்து, சிற்றாலிகள் ஒவ்வொன்றாய்ச் சேகரித்து உள்வாங்கி சுழன்றெழுந்து ~ஹோ| எனும் இரைச்சலாய், பேரிரைச்சலாய் ஆரோகணித்து உச்சஸ்தாயில் தணிந்து குளிர்ந்து எமக்குக் கிட்டும் சுத்தக்காற்று.
சுத்தக்காற்று........! பரிசுத்தக்காற்று......! சுதந்திரக்காற்று மோத முகமூடிகள், வாயுக்கவசங்கள் அனைத்தும் அறுந்து வீழும் அக்கணமே.
தேடல்களும் அடையாளப் படுத்தல்களும் அப்போது ஸ்தம்பிதமாகும்.
அன்று வேலையிலிருந்து எனக்கும் ஓய்வு கிடைக்கும்.
என் சைக்கிளும் ஓரிடத்தில் தரித்திருக்கும்.
1996

தொடர்பாடல்
மனக்கண்ணாடிகள் மர்மமானவை.
பிறப்பெடுத்த மனிதர் எத்தனையோ
அத்தனையுண்டு அவற்றின் விதங்கள்.
இடதை வலதாயும்
வலதை இடதாயும் புறம் மாற்றி
எட்டத்தை கிட்டவாக்கி
கிட்டியதை
எட்டித்தள்ளி வைக்கும் மனக்கண்ணாடிகள்
மர்மமானவை.
குவிவாடி, குழிவாடி, ரசவாடியாய்
பச்சோந்தித் தோற்றங்கள் பலகாட்டி
பிறன்கண் பீழை உருப்பெருக்கி - அவை
தம் இருப்பை மறந்துவிடும்.
சிதறுவில்லைக் கண்ணாடிகளோ
முடுக்குகளில் இடுங்கிச் சரிந்து
வேற்று நிறங்களாய் வித்தைகள் காட்டும்.
ஆடிகளின் அசைவுக்கேற்ப
ஓளிதெறித்துக்
குவியும் கணத்தில்……
வெளிப்படும் வார்த்தைகளும், வரிகளும்
உருக்களில் பெருத்தும் சிறுத்தும்
கருமாறிக் கிடக்கும்.
உள்ளங்கையில் குழையல் சோறாய்
வெறும் பொய்யும் மெய்யும்
திரண்டு நிற்கும்.
மனக்கண்ணாடிகள் மர்மமானவை.
பாவனையில் உள்ள
நம் மொழிகளோ மாயையானவை.
04.06.1998.
பிறப்பெடுத்த மனிதர் எத்தனையோ
அத்தனையுண்டு அவற்றின் விதங்கள்.
இடதை வலதாயும்
வலதை இடதாயும் புறம் மாற்றி
எட்டத்தை கிட்டவாக்கி
கிட்டியதை
எட்டித்தள்ளி வைக்கும் மனக்கண்ணாடிகள்
மர்மமானவை.
குவிவாடி, குழிவாடி, ரசவாடியாய்
பச்சோந்தித் தோற்றங்கள் பலகாட்டி
பிறன்கண் பீழை உருப்பெருக்கி - அவை
தம் இருப்பை மறந்துவிடும்.
சிதறுவில்லைக் கண்ணாடிகளோ
முடுக்குகளில் இடுங்கிச் சரிந்து
வேற்று நிறங்களாய் வித்தைகள் காட்டும்.
ஆடிகளின் அசைவுக்கேற்ப
ஓளிதெறித்துக்
குவியும் கணத்தில்……
வெளிப்படும் வார்த்தைகளும், வரிகளும்
உருக்களில் பெருத்தும் சிறுத்தும்
கருமாறிக் கிடக்கும்.
உள்ளங்கையில் குழையல் சோறாய்
வெறும் பொய்யும் மெய்யும்
திரண்டு நிற்கும்.
மனக்கண்ணாடிகள் மர்மமானவை.
பாவனையில் உள்ள
நம் மொழிகளோ மாயையானவை.
04.06.1998.
நிலுவை
நீ திருப்பித் தரலாம்
மணிக் கூட்டை
கை விளக்கை, கத்தரிக்கோலை
(கன்னிமீசை வெட்ட நீயாய்க்
கேட்டது நினைவு)
கடும்பச்சை வெளிர் நீலக்
கோடன் சேட்டுக்களை
தரலாம் - இன்னமும் மிச்சங்களை
இன்று பல்லி எச்சமாய்ப் போனவற்றை.
உன் முகட்டில் சுவடாய்ப்
பதித்த
என் காட்டுரோஜா உணர்வுகளையும்,
அள்ளியள்ளித் தெளித்து
பூப் பூவாய்ப் பரவிய
திவலைக் குளிர்ச்சியையும்
எப்படி மறுதலிப்பாய்?
எந்த உருவில் திருப்பி அனுப்புவாய்?
கடிதத்திலா
காகிதப் பொட்டலத்திலா?
இதில் நான்
உனக் கிட்ட உதட்டு முத்தங்களையோ
நீ எனக்குள் செலுத்திய
ஆயிரத் தெட்டுக் கோடி விந்தணுக்களையோ
நான் கணக்கில் எடுத்து
சேர்க்கவில்லை என்பது மட்டும்
நமக்குள்
ஒரு புறமாகவே இருக்கட்டும்.
20.10.1995
மணிக் கூட்டை
கை விளக்கை, கத்தரிக்கோலை
(கன்னிமீசை வெட்ட நீயாய்க்
கேட்டது நினைவு)
கடும்பச்சை வெளிர் நீலக்
கோடன் சேட்டுக்களை
தரலாம் - இன்னமும் மிச்சங்களை
இன்று பல்லி எச்சமாய்ப் போனவற்றை.
உன் முகட்டில் சுவடாய்ப்
பதித்த
என் காட்டுரோஜா உணர்வுகளையும்,
அள்ளியள்ளித் தெளித்து
பூப் பூவாய்ப் பரவிய
திவலைக் குளிர்ச்சியையும்
எப்படி மறுதலிப்பாய்?
எந்த உருவில் திருப்பி அனுப்புவாய்?
கடிதத்திலா
காகிதப் பொட்டலத்திலா?
இதில் நான்
உனக் கிட்ட உதட்டு முத்தங்களையோ
நீ எனக்குள் செலுத்திய
ஆயிரத் தெட்டுக் கோடி விந்தணுக்களையோ
நான் கணக்கில் எடுத்து
சேர்க்கவில்லை என்பது மட்டும்
நமக்குள்
ஒரு புறமாகவே இருக்கட்டும்.
20.10.1995
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
தடைதாண்டி
நம் நேற்றைய சந்திப்பு
கடந்த பின் -
நீ -
உன்னை எந்நிமிடமும்
எதிர் கொள்ள
நான் தயாராகவே இருக்கிறேன்.
என் ஆத்துமமும், அறிவும்
முழு உள்ளமும், இந்த ஊனும்
உன்னை நோக்கியபடிக்கு
பனிப்புகையாய் மேலெழுவது
புரிகிறது எனக்கு.
இவ்வுணர்வுகளுக்கு
வேலியிட்டுப் பாத்தி கட்டிப்
பெயரிட நான் தயாரில்லை
நீயும் நானும்
வரையறைகளைக் கடக்கவேண்டும் - நான்
உன் விவேகத்தோடும்
நீ என் வீரியத்தோடும்
கடக்கவெண்டும்.
எனினும்
என் கருவறையை
நிறைப்பது உன் குறியல்ல
என் புரிதலோடு
வா!
ஓன்றாய்க் கடப்போம்.
நீ என் விவேகத்தோடும்
நான் உன் வீரியத்தோடும்
24.03.1997
கடந்த பின் -
நீ -
உன்னை எந்நிமிடமும்
எதிர் கொள்ள
நான் தயாராகவே இருக்கிறேன்.
என் ஆத்துமமும், அறிவும்
முழு உள்ளமும், இந்த ஊனும்
உன்னை நோக்கியபடிக்கு
பனிப்புகையாய் மேலெழுவது
புரிகிறது எனக்கு.
இவ்வுணர்வுகளுக்கு
வேலியிட்டுப் பாத்தி கட்டிப்
பெயரிட நான் தயாரில்லை
நீயும் நானும்
வரையறைகளைக் கடக்கவேண்டும் - நான்
உன் விவேகத்தோடும்
நீ என் வீரியத்தோடும்
கடக்கவெண்டும்.
எனினும்
என் கருவறையை
நிறைப்பது உன் குறியல்ல
என் புரிதலோடு
வா!
ஓன்றாய்க் கடப்போம்.
நீ என் விவேகத்தோடும்
நான் உன் வீரியத்தோடும்
24.03.1997
மன்னம்பேரிகள்
காலப் பொழுதுகள் பலவற்றில்வீதி வேலி ஓரங்களில்
நாற்சந்தி சந்தைகளில்
பிரயாணங்கள்; பலவற்றில் கண்டிருக்கிறேன்.
நாய் கரடி ஓநாய்
கழுகு பூனை எருதாய்ப்
பல வடிவங்கள் அதற்குண்டு.
தந்திக் கம்பத் தருகே
கால் தூக்கியபடிக்கு
என்னை உற்றுக் கிடக்கும்
அம் மிருகம் துயின்று
நாட்கள் பலவாகியிருக்கும்.
அதன் கண்கள்
நான் அறியாததோர்
மிருகத்தின் கண்களைப் பறைசாற்றிற்று
அவற்றின் பாலைத் தாகம்
அறியாப் பாஷையை
எனக்குள் உணர்த்திற்று.
அழகி மன்னம்பேரிக்கும்;
அவள் கோணேஸ்வரிக்கும்;
புரிந்த வன்மொழியாகத்தான்
இது இருக்கும் என
அவதியாய் எட்டிக் கடந்து போனேன்.
அன்றைய அலைச்சலும்
மனக்குமைச்சலும் கூடிய
தூக்கத்தின் இடையில் - நானும்
அவள்களுக்குப் புரிந்த
அதே அதே ஆழத்திணிக்கப்பட்ட
பாஷையை புரிந்து கொண்டேன்.
அருகே கணவன்
மூச்சு ஆறிக்கிடக்கிறான்.
10.07.1997
மன்னம்பேரி(22) 1971 ஜே.வி.பி கிளர்ச்சியில் பங்கு கொண்டவள். பெண்கள் அணிக்கு தலைமை தாங்கியவள். 1971 ஏப்பிரல் 16இல் மன்னம்பேரி படையினரால் கைது செய்யப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டாள்.
கோணேஸ்வரி(33) அம்பாறை சென்றல் கேம்ப் 1ம் கொலனியைச் சேர்ந்தவள். 1997 மே 17 இரவு இவரது வீட்டுக்குச் சென்ற படையினர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியபின் அவளின் யோனியில் கிரனெட் வைத்து வெடிக்கச் செய்து சிதறடித்துச் சென்றனர்
Tuesday, 14 September 2010
வீரக்கோன் முதலியார்
வீரக்கோன் முதலியார்
1686
இவரது ஊர் திருக்கோணமலையைச் சேர்ந்த தம்பலகமம். இவரியற்றிய நூல் 'வெருகல் சித்திரவேலாயுதர் காதல்',இந்நூல் 421 கண்ணிகளைக் கொண்டது; திருககோணமலைக்குத் தெனபாலுள்ள வெருகற் பதியிலெழுந்தருளியிருக்கும் சித்திரவேலாயுத சுவாமியின் புகழைக் கூறுவது. கண்டியிலிருந்து அரசாண்ட இராசசிங்கன் என்பவன் நூலினுட புகழப்படுகின்றமையின் நூலாசிரியர் வாழ்ந்த காலமும் அவன் காலமேயாம் (1686).
சித்திரவேலாயுதர் காதல்
சீர்பூத்த தென்வெருகற் சித்திரவே லாயுதர்மேல்
ஏர்பூத்த செந்தமிழா லின்பரசக் காதல்சொல்ல 1
வார்பூத்த கும்பதன வல்லவைதன் பாகமுறுங்
கார்பூத்த மேனிக்க ணபதிதாள் காப்பாமே. 2
தென்னிலங்கை ராவணணைச் செய்யவிர லாலூன்றிப்
பின்னவன்ற னின்னிசையைப் பெட்புடனே கேட்டுவந்து
வாளுடன்வா ணாள்கொடுத்த மாகோணை நாயகர்தந்
தாளிணையெந் நாளுந்த மியேனுக் குத்துணையே. 4
செயய வெருகனகர்ச் சித்திரவே லாயுதர்மேல்
வைய மகிழு மதுரமொழிக் காதல்சொல்ல 5
மையனைய பூங்குழலாண் மாதுபிடியன்னநடை
ஐயைமலர்ப் பாதமதை யன்பாகப் போற்றிசெய்வாம். 6
...............................
வேலரிடம் தூதாய் விரைந்தேதி யென்றுயரைச்
சாலமுடன் சொல்லுஞ் சமயம€தைக் கூறுவன்கேள் 368
என்போலும் பெண்களிசைந்தனுப்புந் தூதுவர்கள்
அன்புடனே பேசு மமையமதிற் சொல்லாதை. 369
இந்திரனுஞ் சந்திரனு மெண்ணிரிய விண்ணவரும்
வந்துதொழும் போதெனது மையறனைச் சொல்லாதை.
வீரவா கோடுமற்றும் வீரர்மற்றும் வீரர்தொழு தேத்துகின்ற
நேரமதி லென்மயலை நீயெடுத்துச் சொல்லாதை 371
மெத்தபுகர் வாய்ந்த வெருகற்ப தியுறையுஞ்
சித்திரவே லாயுதரின் சீரடியி லன்புகொண்டு 372
மானமு டன்மிக்க வயனிலமுந் தோப்புகளும்
மானிய மாயீந்த மகராச ராசேந்திரன் 373
மாணிக்கம் வைத்திழைத்த வன்னப்ப தக்கமுடன்
பூணணிக ளீந்து புகழ்படைத்த பூபாலன் 374
கண்டிநக ராளுங் கனகமுடி ராசசிங்கன்
தெண்டனிடும் போதெனது சேதியைநீ சொல்லாதை. 375
சித்திரவே லாயுதவேள் சேர்ந்துமகிழ் வாயுறையுஞ்
சித்திரஞ்சே ராலயமுஞ் செம்பொற் சினகரமும் 376
திட்டமுடன் முன்னாளிற் செய்தநல்ல நாகனெனுஞ்
செட்டிவம்மி சத்திலுள்ள செய்யபிர தானிகள்போய் 377
பன்னரிய பாதம்ப ணிந்துதொழு சேத்துகையில்
என்னடைய சங்கதியை யெள்ளவுஞ் சொல்லாதை. 378
துன்னு மிருமரபுந் துய்யவிளஞ் சிங்கமெனும்
வன்னிமைபொற் பாதம் வணங்கையினீ சொல்லாதை 379
சாற்று நிலைமை தலைமையுடன மற்றுமுளார்
போற்றுகையி லென்மயலைப் பூங்கிளியே சொல்லாதை 380
வித்வசனர் பாமாலை மெல்லடியிற் சூட்டுகையிற்
சத்தியமா யென்மயலைச் சற்றுநீ சொல்லாதை. 381
எண்டிசையிற் பாலகரு மிப்புவியி லுள்ளவருந்
தெண்டனிடும் வேளையிலென் சேதிதனைச் சொல்லாதை. 382
வன்னிமைதே சத்தார்ம காநாடு தான்கூடி
மின்னுமெழின் மண்டபத்தில் வீற்றிரக்கும் வேளையிலே 383
கோதில்புகழ் சேர்வீரக் கோன்முதலி தானியற்றுங்
காதலரங் கேற்றுகையிற் காதறனைச் சொல்லாதை

திருக்கரைசைப்புராணம்
கரைசைப்புலவர்
இவர் திருக்கரைசைப்புராணம் என்னும் நூலின் ஆசிரியர். திருக்கோணமலைக்கு அருகிலுள்ள மகாவலி கங்கைக் கரையிலே 'கரைசை *என வழங்கும் பதியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் புகழை விரித்துக் கூறுவது இந்நூல். கரைசையம்பதியானது 'அகத்தியத் தாபனம்' எனவும் அழைக்கப்படும்.
நூலாசிரியரின் இயற்பெயர் தெரியவில்லை. நூற்பாயிரத்துள்ளே குருவணக்கம், புராண வரலாறு என்னும் பகுதிகளுள் வரும் 'ஈசானச்சிவன் மலர்த்தாள் மறவாது', 'கொற்றங்குடிவாழும் பிரான் சரணத் துறுதிகொண்டே' முதலிய குறிப்புக்களினின்றும் இந்நூலாசிரியர் உமாபதி சிவாசாரியரின் சீடர்களுள் ஒருவர் என்பாருளர் எனக் கூறுவர் சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர். "சிலர், எமாபதி சிவாசாரியர் பரமபரையிலுள்ளார் ஒருவர் என்பர்" எனக் கூறுவர் திருக்கோணமலை அகிலேசபிள்ளை. அவர் கூற்றின்படி தக்கிண கைலாச புராணத்தின்பின் எழுந்தது இந்நூல்.
உமாபதிசிவாசாரியர் 1304இல் கொடிக்கவி என்னும் நூலை இயற்றினர். எனவே 1380-1414இல் அரசாண்ட சிங்கைச் செகராசசேகர மகாராசாவின் வேண்டுகோளுக்கிணங்கிப் பண்டிதராசர் போன்ற ஒரு புலவராலே திருக்கரைசைப் புராணம் இயற்றப்பட்டது எனக் கோடல் பொருந்தும்.
ஈழத்தில் பெருமையையும் மகாவலிககங்கைச் சிறப்பையும் இந்நூலிற் பரக்கக் காணலாம்.
திருக்கரைசைப் புராணம்
கடவுள் வாழ்த்து
விநாயகர் துதி
பொன்னிரவி தனைவளைத்துப புகுந்துலவு
மொருநேமிப் பொற்றேர் மீது
மன்னிரவி யெனவிளங்கு சுதரிசன
மூவிலைவேல் வயங்கு சங்க
மின்னிரவி னிருள்கடியும் பிறைக்கோடும்
கரத்தேந்தி மேவா ருள்ளக்
கன்னிரவி மதம்பொழியுங் கரைசையில்வாழ்
கரிமுகனைக் கருத்துள் வைப்பாம். 1
_______________________
*கரைசை, கரசை, ஆகிய இரு வழக்குக்களும் நூல்களிற் காணப்படுகின்றன.
குருவணக்கம்
அண்டர்பிரா னடமாடுந் தில்லைமணி
மன்றதனி லகலா தென்றும்
விண்டசிவ சித்தாந்த வேதாந்தப்
பொருள்விளக்கும் விளக்க மாகித்
தொண்டறியா நாயேனுக் கருள்புரிந்து
கிளைமுழுதுந் தொழும்பு கொண்ட
எண்டகுசீ ரீசானச் சிவன்மலர்த்தாண்
மறவாதென் னிதயந் தானே. 2
புராண வரலாறு
வண்ணமலி வடகைலைக் கொடுமுடியாந்
தென்கைலை மணியார் தம்மைத்
தண்ணமரு மலரிட்டுத் தாடொழுவான்
பொருட்டங்ஙன் சாரா நின்ற
கண்ணகலுங் கலைஞானத் தெளிவனைத்துங்
கைவந்த கலச யோனி
அண்ணலுமுத் தரமுகமே யாகியமா
வலிகங்கை யாடும் போதில். 3
ஆங்கொருபே ரற்புதமா வசரீரி
வாசகத்தா லண்ண லார்த்தம்
பாங்கமருந் தென்மலயம் பயின்றதமிழ்க்
குறுமுனிவ பயிலு கின்ற
வீங்கமரு மிக்கங்கை யிரும்பெருமை
யியல்பிவையா மீங்ங னீயு
மோங்கநம்மைத் தாபனஞ்செய் திடுதியென
வுவனறிய வுரைத்திட் டாரால். 4
அக்கணமே தாபனஞ்செய் தவ்விறைக்குச்
சூதமுனி யருளிச் செய்த
மிக்கதிரும் வடபாடைப் புராணத்தைத்
தன்கலையின் விருத்தப் பாவாற்
றிக்கிசைய வருந்தொண்டர் செய்தியென
வென்னறிவுஞ் சிறிது சேர்த்தி
ஒக்கவுரைத் தனன்கொற்றங் குடிவாழும்
பிரான்சரணத் துறதி கொண்டே. 5
இலங்கைச் சருக்கம்
தனிப்பணி யரசே யுன்றன்
றலையில்வா ழுலக மெல்லாம்
இனிச்சிறு கணத்தி னுள்ளே
யில்லையென் றாகு மந்தோ
மனத்தினி லருள்சு ரந்து
மல்கிய பணத்தி லொன்றைக்
குனித்தினி யொதுக்க வேண்டுங்
குவலயம் பிழைக்க வென்றார். 6
அம்மொழி கேட்ட பின்ன
ரடலராக் குலத்து வேந்துந்
தம்மது பணத்தி லொன்றைச்
சம்றொதுக் கிடவே கண்டு
பொம்மெனப் பலத்தான் மோதிப்
பொற்கிரிச் சிகரத் தொன்றைத்
தெம்மலி பவனன் றள்ளித்
தென்றிசைக் கடலில் வீழ்ந்தான். 7
ஒண்டரு மீரட்டி முப்பான் யோசனை விசால மாகி
அண்டியோ சனைதா னீள மைம்பதிற் றிரட்டி யாகி
மண்டிய புரிசை யேழாய் வாயில்க ளெட்ட தாகி
திண்டரு மொன்பான் கோடி சிவாலயந் திகழ்வ தாகி 8
ஆடகத் தமைத்த பித்தி யகப்புறம் புறப்பு றங்கண்
மேடகத் தெற்றி மாட மிளிர்மணி விமான கூடம்
பாடகப் புறந்தாட் கிள்ளைப் பனிமொழிப் பவள வாயார்
நாடகத் தரங்கந் துன்று நனிநெடு வீதி நண்ணி 9
காண்டகு மிடங்க டோறுங் கலிகைவா யவிழ்ந்த விழ்ந்து
பூண்டதேன் றிவலை சிந்திப் பொன்னிறப் பராகந் தெள்ளும்
நீண்டவான் கற்ப கத்தி னீழலஞ் சூழன் மேவி
ஈண்டரு மிலங்காத் தீப மீழமா யிசைந்த தன்றே. 10
அப்பதி யதனிற் பச்சை யணிமணி யடக தாகத்
துப்புறு முத்தம் வல்சி சொன்னவான் கலத்திற் சேர்த்தி
குப்புற வண்ட லாடுங் கோதையர் குழாங்க ளென்றா
லெப்பதியதற்கொப் பாமென் றியம்பிடுந் தகைமைத் தம்மா. 11
சுத்தவான் கதிரி னோடு தூமணிக் கதிருத் தோய்வுற்
றெத்திசை களினு மேற விரும்பகற் போது மல்கும்
நத்தமு மிந்திர நீல நகையிருட் பிழம்புங் கூடி
வைத்தபே ருலகிற் கேற மல்கிடு மிரவின் போ. 12
காடெலாங் கரிநல் யானை கரையெலாம் பவளக் குப்பை
நாடெலா மிரத்ன ராசி நகரெலாம் நல்லோர் சங்கம்
வீடெலாஞ் செம்பொற் கூரை வெளியெலாஞ் செந்நெற் குன்றங்
கோடெலாம் மஞ்ஞை யீட்டம் குழியெலாங் கழுநீர்ப் போது. 13
காவெலாம் மதன பாணங் கரையெலாஞ் சங்கச்சங்கம்
பூவெலாம் வண்டின் சாலம் புறவெலாம் நிரையி னீட்டம்
மாவெலா மன்னக் கூட்டம் மலையெலாங் காள மேகம்
நாவெலா மமிர்த கீத நதியெலா முதுநீர்த் தீர்த்தம். 14
தண்ணமர் சாலி முத்தும் தடங்கட லிப்பி முத்தும்
வண்ணவொண் பணில முத்தும் வரையறா வோல முத்தும்
கண்ணமர் கரும்பின் முத்துங் ககனமஞ் சீன்ற முத்தும்
வெண்ணில வில்லாப் போது மிகுநிலாக் கொழிக்கு மன்றே. 15
பணிலம்வெண் டிரையி னார்ப்பப் பவளமுந் தவள முத்தும்
மணிகளுஞ் சாந்தும் பூவும் மாலையும் பிறவும் வேய்ந்தும்
திணிமதிக் குடைக வித்துத் திரைக்குழாங் கவரி காட்ட
அணிமணி வீதி தோறு மாழியு முலாவு மாமால். 16
கொஞ்சிய கிள்ளை மென்சொற் கோதையர் சிலம்பி னார்பும்
வஞ்சியின் காஞ்சி யார்ப்பும் வாயறாத் தமிழி னார்ப்பும்
விஞ்சிய மள்ள ரார்ப்பும் விழாவெழு முழாவி னார்ப்பும்
அஞ்சிறை வண்டி னார்ப்பு மன்றியோ ரார்ப்பு மின்றால். 17
தெளிவுறு கிரணக் கற்றைச் செம்மணிப் பத்தி சேர்ந்து
குளிர்புனல் நதிக ளெல்லாங் குருதியி னாறு போலு
மொளிர்தரு மிப்பி யீன்ற வொண்ணிறத் தவள முத்தின்
வெளிநிலா வீங்கி யுப்பு வேலைபா லாழி யொக்கும். 18
ஊட்டு செஞ்சுடர் மணியினைத் தடியென வுகந்து
காட்டுத் தம்மிரு பதங்காளற் கவர்கின்ற கங்கந்
தோட்டுத் துண்டங்கொண் டுண்பதற் காமெனத் துணிந்து
கூட்டில் வைத்தன பறந்தன வாதரங் கூர்ந்து. 19
மடைகி டந்தவொள் வளவயற் றொளியறா வரம்பின்
கிடைகி டந்தசங் குதவிய முத்தெலாங் கண்டு
புடைகி டந்ததம் மண்டங்க டம்மொடு புகட்டி
யடைகி டந்தன சிறையகத் தடக்கியே யன்னம். 20
மாறில் பாளைகண் மலரிளங் கமுகினல் வாளை
யேறு பாய்தர வயலெலா முகுவன விளங்கா
யாறு பாய்வதென் றதிசய மெனக்கரும் பாலைச்
சாறு பாய்தர வளாவன கழனியிற் சாலி. 21
இன்ன லின்றியே யிணர்த்ததா ளிப்பனை யெவைவும்
பொன்னின் வீதியுட் பொலிநிலைத் தேர்க்குழாம் போலுங்
கன்னி மார்குழல் கூந்தலங் கமுகுகள் காட்ட
வன்ன பாளைக ளளிப்பன கமுகுக ளனந்தம். 22
கண்ணி லாவிய நறுந்தொடைக் காளையர் தங்கள்
வண்ண மாதர்கள் வதனமேற் புணர்கின்ற வைரம்
மண்ணி லாவிய வெண்ணிறக் கலைமதி யெழுச்சி
யுண்ணி லாவிய புனலிடைக் கண்டபி னொழிப்பார். 23
மஞ்சின் முத்தமு மரந்தையின் மரகத மணியும்
விஞ்சு செம்பொனும் வலவயிற் செம்மணி வேய்ந்தும்
மஞ்சொற் கம்பலை யாற்றினன் னீலமு மவிர்ந்தும்
பஞ்ச வன்னமே யிரவினும் பகலினும் பயிற்றும். 24

Monday, 13 September 2010
பாலை
பாலை
விண்ணாங்குப் பற்றைகளும், காவிளாய்ச் செடிகளும் சுண்டம் புதர்களம் மண்டிப் பரட்டைக் காடாய்க் கிடந்த அந்தப் பிராந்தியத்திலே, அந்தப் பாலை மரம் மட்டும். மொட்டை வெளியில் தலைநிமிர்ந்து தோன்றும் இராஜகோபுரம் போல் ஆழத்தில் வேரோட விட்ட இறுமாப்பில் சடைத்துக் கிளை பரப்பி நின்றது. வரண்ட கச்சான் காற்றுச் சுழற்றியடித்து சுற்றுப்புறத்தையே சருகாய் உலர்த்திக் கலகலக்க வைத்துச் சுள்ளிகள் உராயத்தித்தோன்றம் அருங்கோடையில்கூட, அந்தப் பாலை மரம் மட்டும் 'கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவாய்' ஊருக்குள்ளே தலை நிமிர்ந்து பச்சை ஓலைகளை விரித்து தென்னை மரங்களின் பசுமைக்கப் போட்டியாக அப்பாலை மரம் மட்டுமே அப்பிராந்தியத்தில் காம்பீரித்தது.
பதினைந்து வருடங்களுக்கு முன்னே....
உள்ளுர் மிஷன் பாடசாலையிலே ஏழாம் வகுப்புப் படித்துக்கொண்டு இருந்த சிவஞானத்திற்கு அன்று சித்திரை விடுதலை. சித்திரை வருடப் பிறப்பிற்காக வீட்டு முற்றங்களில் பரப்பப்பட்டு இருந்த குருத்து மண் இன்னமும் கோலம் மங்கவில்லை. சிறியவர்களும் பெரியவர்களம் உடுத்த புத்தாடைகள் இன்னமும் புதிது மங்கி வண்ணான் சலவைக்குப் போகவில்லை. ஏன்? புது வருடப் பிறப்பன்று விலைமலிவான வடிசாராயத்தை மாந்திய சிலரால் ஊருக்குள்ளே 'கரமுச' என்று ஏற்பட்ட பூசல்களின் 'நிலையற்ற தன்மை' கூட இன்னமும் செத்துவிடவில்லை. ஆனால் அதற்குள் 'இளக்கந்தை வெளி' விளைந்து அறுவடைக்குத் தயாராகிவிட்டது. சிவஞானத்தின் தந்தையாரும் அந்த வெளியில் தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தையும் செய்கை பண்ணி இருந்தார்!
'ஆமாம்! தென்கைலை நாதரான கோணேசரின் பூசனைக்காகச் சந்தனக் கட்டைகளைக் கடல் வழிக்கொண்டு கொடுப்பதற்காக அக்கிராமத்தார் அங்கு குடியேற்றப்பட்டார்கள்' என்று கல்வெட்டுக் கூறலாம். ஆனால் குளக்கோட்டன் மூட்டிய திருப்பணியைப் பறங்கி பிடித்து, அதற்குப் பின்னால் அதுபூனைக் கண்ணன், புலிக்கண்ணன் கைக்கு மாறிய பிறகு, சந்தனக் கட்டை விவகாரம் பொய்யாப் பழங்கதையாய்ப் போயிற்று. புராண காலத்தின் பிரக்ஞையே அற்றுப் போய் விட்ட இடைக்காலத்தில் 'நாங்கள் எல்லோருமே வல்வெட்டித் துறையிலிருந்து வந்த குருகுலத்தவர்' எனப் பெருமை பேசிக்கொண்டு சிவபெருமான் மீனுக்கு வலை வீசிய படலத்தைப் பாராயணம் செய்பதில் ஊரவர்கள் எல்லாருக்குமே ஒரு திருப்தி. ஆயின் அந்த வல்வெட்டித் துறைத்தொடர்பும் சீவிய காலத்தில் ஒரு தடவையோ, மிஞ்சினால் இரண்டு முறையோ செல்வச் சந்நிதியானைத் தரிசிப்பதோடு மட்டும் நின்று இப்போதெல்லாம் உள்ளூர் வருண குலப் பிள்ளையாருக்கு ஆடித் திருவிழா எடுக்கையில் 'சின்ன மேளம்' என்ற நாட்டியக்காரிகளை யாழ்ப்பாணத்திலிருந்து வரவழைத்து ஆட்டுவிப்பதோடு மட்டும் இருக்கின்றது. இப்படிப் புராண, இடைக் காலக் குருகுலப் பெருமை பேசுவதைத் தவிர, கிராமவாசிகள் அத்தனை பேருமே மண்ணை நம்பி வாழும் விவசாயிகள்! ஆகவே வேளாளர்கள்!
அவர்கள் கொட்டியாபுரக் குடலையடுத்த மணல் மேட்டிலே குடியேறி இருந்தாலும், காவும் பொழிலும் கழிமுகமும் புள்ளணிந்த ஏரியும் மல்கிய கொட்டியாபுரப் பற்றிலே, மாவலித்தேவி செவிலியாய்ப் புரக்கும் கழனிகளிலே கணிசமான பகுதிக்குச் சொந்தக்காரராக இருந்தார்கள். அக்காணிச் சொந்தக்காரர்களின் வீட்டு முற்றத்திலே 'நெற்பட்டறை' இருக்கும்! இப்பெரிய புள்ளிகளை விட்டுவிட்டால் மற்றவர்க்கெல்லாம் கிராமத்தைச் சூழவிருந்த காடுகளும், அக்காடுகளைத் திருத்திய 'மானம் பார்த்த' பூமிகளம் பிதிராஜிதம்!
இளக்கந்தை வெளி அந்த இரண்டிலும் அடங்காத 'இரண்டுங் கெட்டான்'பூமி. மாவலித் தேவி மகவாய்ப் புரக்கும் தாயாகிய தண்ணளியை, கட்டைபறிச்சான் கிராமத்தின் தெற்கு எல்லையாய் குடாக் கடலிலிருந்து உள்வாங்கி நீண்டு நெளியும் உப்பங்கழிக்கு அப்பால் செய்து கொண்டு இருக்கையில், கிராமமும் அதன் வடபகுதியும் கங்காதேவியின் கருணைக் கரங்கட்கு அப்பாற்பட்டதாய் வரண்டே இருந்தது. வரண்டு கிடந்த அந்தக் காட்டிலே, ஊரிலிருந்து பத்து மைலுக்கு அப்பால் எப்போதோ கட்டப்பட்ட அணைகளின் நடுவே குளம் என்ற பேரில் ஓர் பள்ளம். ஆவணி மாதத்திற் பிலமாய் வெடித்து வான்மழைக்காக ஆவென்று வாயைப் பிளந்து கொண்டே இருக்கும். வாடை யூதத் தொடங்கி மழை பெய்கையில் மார்கழி மாதத்தில் அப்பள்ளம் குளம் என்ற அந்தஸ்தைப் பெற்று நீர் நிரம்பி வழியத் தொடங்கிவிடும். அந்த நீரை நம்பிக் குளத்தின் அயலிலே இருக்கும் ஐம்பது ஏக்கர் வெளியில் தைமாதம் விதைப்புத் தொடங்கிவிடும்! குளம் நிரம்பாவிட்டால் 'மேற்கே பத்துப் பன்னிரண்டு மைல் தூரத்தில் ஓடும் கங்கையில் இருந்து வாய்க்கால் எடுத்து இந்தக் குளத்தை நிரப்ப எந்தப் பகீரதன் பிறக்கப்போகிறான்? என்ற பெருமூச்சோடு குளக்கட்டின் மேலே கோயில் கொண்டிருக்கும் குளக்கட்டின் மேலே கோயில் கொண்டிருக்கும் அம்மனுக்குப் பட்டுச் சார்த்துவதோடு, அந்நிலத்தை நம்பி வாழ்பவர்கள் திருப்தி அடைய வேண்டி இருக்கிறது.
சென்ற வருடம் வானம் பொய்க்கவில்லை. இளக்கந்தைக் குளம் நிரம்பியது, வழிந்தது. சிவஞானத்தின் தந்தையாரும் மற்றவர்களும், இளக்கந்தை வெளியைச் செய்கை பண்ணினார்கள். இப்போது அறுவடைக்குத் தயாராகி விட்டது.
* * *
வெள்ளை மாடுகள் பூட்டப்பட்ட கோணாமலையின் வண்டி கிராமத்தின் மணல் ஒழுங்கைக் கூடாகப் போய்க் கொண்டிருந்தது. வண்டிக்குள்ளே சமைப்பதற்கும் தண்ர் எடுப்பதற்குமான பாத்திரங்கள், ஒரு பையிலே கறிக்கான காய் வகைகள், உப்பு-புளி அடுத்தது அரிசிச் சாக்கு' வண்டியோட்டிச் செல்லும் தன் தந்தையாருக்குப் பக்கத்திலே, அரிசிச் சாக்கின் மேலே சிவஞானம் தூக்கக் கலக்கத்தோடு குந்திக் கொண்டிருந்தான்.
சித்திரை மாதமானதால் இலை அசையவில்லை. காற்றாடவில்லை. அட்டமி கழிந்த தேய்பிறையின் திராணியற்ற ஒளி கிழக்கு வானத்தின் வெளுப்பிற்குப் போட்டியாக அப்பிராந்தியத்தையே அமுதப்பிரவாகமாக்க முயன்ற தோல்வியடைந்து கொண்டிருந்தது. வண்டி மாடுகளின் சதங்கை ஒலிக்குப் போட்டியாக ஊர்ச் சேவல்கள் நீளக் குரலெடுத்துக் கூவிக்கொண்டிருந்தன. பாலைமரத்திலே அப்போதுதான் துயிலுணர்ந்த காகம் ஒன்று மெதுவாகக் கரையத் தொடங்கிற்று.
ஊரின் எல்லையைத் தாண்டிப் பழக்கப்பட்ட பாலையின் வழியே நடந்து, வண்டி பாலைமரத்தடியை அடைந்தபோது கோணாமலை காளைகளின் மூக்கணாங்கயிற்றை இழுத்துப் பிடித்து அதை நிறுத்தினார். சிவஞானம் அதற்கான காரணத்தை அறியாதவனாய் வண்டிக்குள்ளிருந்து எட்டிப் பார்த்தான். வைகறையின் மங்கலான ஒளியில் விண்ணாங்குப்பறைகளும் காலியாய்ச் செடிகளம் சுண்டம் புதர் கரும் பூதங்களாகக் காட்சியளித்தன. இடையிடையே காட்டுக் கிழங்க கல்லிய குழிகளிலிருந்து பறிக்கப்பட்ட குருத்து மண்வெண்மை கலந்த நிறத்தில் மினுங்கிக் கொண்டிருந்தது.
'அருவி வெட்ட என்று வர இருப்பவர்கள், சொந்தக்காரராகவே இருப்பினும் கூலிக்கே வருபவர்கள். அப்படி வருபவர்கள் நாம் என்னதான் அவசரப்பட்டாலும், தங்கள் 'சித்தந் திரும்பி' ஆறுதலாகப் பொழுது நன்றாக விடிந்த பின்னர்தான் வீட்டிலிருந்து கிளம்புவார்கள்' என்ற நடைமுறை உண்மை கோணாமலைக்க நன்கு தெரியும் ஆயினும் நேற்று வருகிறேன் என்றவர்கள், இன்று வராமலே இருந்து விடுவார்களோ என்ற சந்தேகம் அவருக்குக் கிளம்பவே. தான் புறப்பட்டு விட்டதை அவர்கட்கு அறிவிக்கும் முகமாகத் தன் இருகைகளையும் கூட்டிப் பாம்பு விரல்களின் நுனியை மூக்கடியிற் சேர்த்து கூவென்று நீளக் குரலெடுத்துக் கூவினார். அவர் கூச்சந்தம் அந்தப் பிராந்தியம் முழுவதையுமே நிறைத்து எதிரொலித்தது.
அவர் கூவலைக் கேட்டதும் சிவஞானத்துக்கு அவனுடைய அம்மா 'பாலைமரத்திலே இரவிலே போய் கூப்போடுது' என்று தன்னைப் பயமுறுத்தியது ஞாபகத்திற்க வந்தது.
'ஆம்; சென்ற ஆண்டு வைகாசி மாதத்திற் பாலைமரம் பழுத்திருந்தது. மஞ்சள் மஞ்சளாய்க், கொத்துக் கொத்தாய்க் கண்ணைப் பறித்துக் கொண்டிருந்த பழங்களைப் பறிக்க சிவஞானமும் அவன் தோழர்களும் வந்திருந்தார்கள். ஒரு பெரிய ஆள் உயரத்திற்குக் கப்பும் கவரும் இன்றி நெடுத்து மேலே கிளை பரப்பி நிற்கும் பாலை மரத்திற் வேலிக்கதியாற் தடிகளாற் கட்டிய ஏணியைச் சார்த்திக் கந்துகளில் ஏறிக் கொண்ட விசுவம் கிளைகளை ஒடித்து ஒடித்துக் கீழே போடச் சிவஞானமும் மற்றவர்களம் பழங்களை ஆய்ந்து வயிறு கொள்ளுமட்டும் சாப்பிட்டார்கள். பழத்தின் பால் உதடுகளிற் பசையாக ஒட்டிக் கொண்டது. வயிறு முட்டி விக்கல் எடுத்தது. தண்ர்த் தாகம் நாவை வரட்டியது. அந்தக் கோலத்தில் வீடு போய்ச் சேர்ந்தபோதுதான் அம்மா சொன்னா.
"பாலை மரத்துக்காடா போனா, அங்கே பேய்நின்று இரவிலே கூப்போடுது இனிமேற் போகாதடா" அம்மாவின் பேச்சுக்குப் பின்னால் அவனுக்குப் பாலை மரத்துப் பக்கம் வரவே பயமாக இருந்தது. ஆனால் விசுவலிங்கம் துணிச்சற்காரன்!
தந்தையாரின் கூச் சப்தத்திற்குப் பதிலாக ஊருக்குள்ளிருந்து இரண்டு மூன்று குரல்கள் கேட்டன.
சிவஞானம் எண்ணிக் கொண்டான்.
அம்மா சொன்னது போல பாலைமரத்திலே இரவிலே பேய்கள் கூப் போடுவதில்லை. தந் தந்தையாரைப் போன்ற வழிப்போக்கர்கள்தான் கூச் சத்தம் போடுகிறார்கள்.
தன் குரலுக்கு எதிர்க் குரல்கள் கேட்டதும், "அவர்கள் வெளிக்கிட்டு விட்டார்கள். நாம நேரத்தோட போய் எல்லாத்தையும் அடுக்குப் பண்ணவேணும்" என்று தன் பாட்டிற் சொல்லிக் கொண்டே காளைகளைத் தட்டிவிட்டார்கள் கோணாமலை.
சதங்கைகள் ஒலிக்க காளைகள் நகரத் தொடங்கின. கிழக்கே வான் வெளுப்பிற் செம்மை படரத் தொடங்கிற்று.
காம்பீரித்து நின்ற பாலைமரத்தைக்கடந்து அதற்கும் அப்பால் உள்ள புதர்களினூடே மணற் தடத்தில் இறங்கி அதற்கும் அப்பால் உள்ள சதுப்பு நிலத்திற் சளசளவென்று பாய்ந்து மேட்டிலேறி, வீரையும் முதிரையுமாக நெருங்கி நின்றகாட்டுமரங்களினூடே கல்லிலும் மரவேர்களிலும் ஏறி விழுந்து, சுதாரித்து நிமிர்ந்து சவாரி செய்த வண்டி, காலைச் சூரியன் கிழக்கு வானத்திலே இரண்டு பாகங்கட்கு ஏறித் தன் ஊசிக்கிரணங்களை முகத்திற் சுள்ளென்று குத்துகையில் இளக்கந்தைக் குளக்கட்டை அடைந்து விட்டது.
கோணாமலை வண்டியை விட்டிறங்கி, மாடுகளை அவிழ்த்து அவைகளை ஒரு வீரை மரத்திலே கட்டி வைற்கோற் கற்றைகளைப் பிரித்து அவைகட்கு முன்னால் விசிறிப்போட்டபின், அரிசிச் சாக்கைத் தலையிலே வைத்தவாறு, சட்டிபானைகள் அடுக்கப்பட்டிருந்த வாளியைக் கையில் எடுத்துக் கொண்டு தன் வயலின்குடிசையை நோக்கி நடக்கத் தொடங்கினார். முழங்காலின் கீழே குதிரைச்சதை முறுக்கேறிக் கிடக்கம் வலிமை மிக்க தன் கால்களை கல்லிலும் கலட்டியிலும் அனாயாசமாய்த் தூக்கி, கருங்காலியாய் உருண்டு திரண்டிருக்கும் தன் ஆகிருதியின் கனத்தில் நிலமடைந்தையே அதிரவைத்துக் கொண்டு நடக்கும் தன் தந்தையரின் பின்னாற் சிவஞானம், அவர் நடைக்கு ஈடு கொடுக்க மாட்டாதவனாய் காய்கறிகள் இருந்த பையைத் தூக்கிக் கொண்டு ஓட வேண்டியிருந்தது.
அப்படி ஓடுகையில், குளக்கட்டிலே மாட்டுக் குளம்புகள் பட்டுப் பிதுங்கிப் பிதிர்ந்து காய்ந்திருந்த மண் பொருக்குகள் அவன் உள்ளங்கால்களைப் பதம் பார்த்தன. எனினும் தன் ஆற்றாமையை வெளிக்காட்டாதவனாய்ச் சிவஞானம் தன் தந்தையின் பின்னால் ஓடிக்கொண்டிருந்தான்.
குளக்கட்டிற் சிறிது தூரம் சென்றபின் செங்குத்தாய்க் கீழிறங்கி பசும் புற்களூடே மலடடித்துப் போய்க்கிடந்த ஒற்றையடித் தடத்தில் இறங்கிச் சில சுவடுகள் வைத்தபின்னர் வயல் வேலியின் 'ஏறு கடப்பு'த் தென்பட்டது. சேற்றிலே நடப்பட்டிருந்த வேலிக்கதியாலை இடக்கையாற் பிடித்து, வேலியின் இந்தப் பக்கத்திலே நிலத்தில் ஊன்றப் பெற்று இடுப்பளவு உயரத்திலே வேலிக்கதியாலோடு சார்த்தப்பட்டுக் கட்டப்பட்டிருந்த கலர்க்கம்பிலே வலக்காலை ஊன்றி, இடக்காலை முட்கம்பிக்கு மேலாக வேலியின் உட்பக்கத்தில் இருக்கம் கம்பிற் தூக்கி வைத்து வேலியைக் கடந்து, வலக்காலை நடை வரம்பிலே ஊன்றி இறங்கி வயல் வரம்பிலே நடக்கத் தொடங்கினார் கோணாமலை. தந்தையார் நொடிப் பொழுதிலே இலாவகமாகச் செய்த இந்தக் கடத்தலை சிவஞானம் வெகு சிரமப்பட்டுச் செய்து நடைவரம்பிலே இறங்கியபோது கோணாமலை நடை வரம்பிலே வெகுதூரம் சென்று விட்டார். சிவஞானம் தன் தந்தையைப் பிடித்து விடுவதற்காக வயல் வரம்புகளிலே வேகமாக-மிகவும் வேகமா நடக்கையில் வரம்பிலே தலைசாய்த்துப் படுத்திருந்த நெற்குலைகள் அவன் கால்களிற் சர சரலென்று உராய்ந்தன. புது வேளாண்மையின் 'சொர சொர'த்த தாள்கள் காலிற்பட்டு முழங்கால்வரை சுணைத்து அரிக்கத் தொடங்கியது. சிவஞானம் நடந்து கொண்டேயிருந்தான்.
முன்னே சென்ற அவன் தந்தையார் சற்றுத் தரித்துநின்றார். தன் வருகைக்காகத்தான் அவர் காத்து நிற்கிறார் என்றெண்ணிய சிவஞானம் தன் நடையை இன்னமும் வேகமாக்கி ஓடினான். ஆனாற் கோணாமலையோ வயல் வரம்பிலே நின்று கொண்டு, தாள் பழுத்துச் சரிந்து, நிலத்திலே வீழ்ந்து அலை அலையாகப் படிந்து, கொத்துக் கொத்தான தன் குலைகளைக் காலைச் சூரியனின் மஞ்சட் கிரணங்களில் மினுக்கிக் கொண்டிருக்கும் தன் வயலை-அதன் விளைச்சலை நெஞ்சம் பெருமிதமடையப் பார்த்துக் கொண்டேயிருந்தார்.
இந்தமுறை அம்மன் கண்பார்த்தே விட்டாள். புதிதாக வந்த 'கம இன்ஸ்பெக்டர்' விதைக்கும்படி வற்புறுத்திக் கூறிய 'முருங்கைக்காயன்' நன்றாகத்தான் குலை தள்ளியிருக்கிறது. எந்தக் குலையிலும் இல்லாமல் அத்தனையும் கலீர் கலீர் என்னும் தங்கக் கட்டிகளாய்....
'விதைநெல், மாட்டு 'விசக்களை' வெட்டுக்கூலி, கூடடிப்புக் கூலி, சில்லறைச் செலவுகள் எல்லாம் போகப் பத்து அவணமாவது மிஞ்சும்.'
என்ற அவர் சிந்தனை ஓட்டத்தின் முடிவிலே "தாயே கந்திலும் களத்திலுமாக இருப்பது நல்லபடியாக வீடு வந்து சேர்ந்து விடவேண்டும்" எனப் பிரார்த்தித்துக் கொண்டார். அவர் கைகள் அவரை அறியாமலே கூம்பிக் கொள்ள கண்கள் பரவசநிலையிற் கண்ருகுத்தன.
தந்தையாரின் மோனப் பிரார்த்தனை முடிவடைகையில் சிவஞானமும் அருகே வந்து சேர்ந்து விட்டான். கோணாமலை தன் மகனைக் கையிற் பிடித்தபடி வயல் நடுவே களத்து மேட்டிலே சடைத்து வளர்ந்திருந்த ஆத்தி மரத்தின் கீழிருந்த குடிசையை நோக்கி நடந்தார்.
* * *
குடிசையை அடைந்த தந்தையும் மைந்தனும் தலைச் சுமையைக் கீழே இறக்கி வைத்தனர். கோணாமலை அடுப்பிலே கள்ளிகளைக் கூட்டி இடையே தேங்காய்த் தும்பைச் செருகி, மடியில் இருந்த தீப்பெட்டியைத் தட்டி நெருப்பு மூட்டினார். காலையாக இருப்பினும் சித்திரை மாதத்து இலையசையாப் பம்மலினும் பொருமலிலும், பிரயாணத்தின் அலுப்பினால் வேர்த்துக கொட்டத் தொடங்கியது. சிவஞானம் தலையிலே கட்டியிருந்த துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டே குடிசைக் கப்பிற் சார்ந்து கொண்டாள். நெருப்பை மூட்டித் தண்ர் கொதிக்க வைத்த கோணாமலை சுடச்சடத் தேநீர் தயாரித்து முடித்தபோது குறுக்கு வழியாக வந்த வெட்டுக்காரர்களின் தலை€க்கறுப்பு ஏறு கடப்பிலே காணப்பட்டது.
அவர்கள் எல்லாரும் வந்துசேர்ந்ததும் சிரட்டைகளில் ஊத்தப்பட்டிருந்த தேநீரை இரசித்துக் குடித்தார்கள். குடித்து முடிந்ததும் தங்கள் உடைகளை மாற்றிக் கொண்டு அருவி வெட்டுவதற்காக வயலிலே இறங்கினார்கள். சிவஞானமும் அவர்களோடு சேர்நது 'தாள்க்கத்தி'யுடன் வயல் 'வரவை'க்குள் இறங்கினான்.
"நீயும் வெள்ளாம வெட்டப் போறியா?" என்ற தந்தையின் கேள்விக்குச் சிவஞானம் சிரிப்பை பதிலாகச் சிந்துகையில், வேளாண்மை வெட்ட வந்தவர்களில் ஒருவரான சிவராசா சொன்னான்.
'என்ன அத்தான் இப்படிக் கேக்கிறீங்க, இந்த வேலையெல்லாம் இப்பவே, நம்மோட இருந்து பழகாட்டாத் தம்பி எப்ப பழகப் போறான்'
கோணாமலை இதற்குப் பதிலே சொல்லவில்லை. வெட்டுக்காரர்கள் எட்டுப்பேருடனும் சேர்ந்து சிவஞானமும் அருவி வெட்ட ஆயத்தமானான்.
வயலில் இறங்கிய எல்லோரும் நெற்கதிர்களை இருகைகளாலும் தொட்டு மானசீகமாக நமஸ்கரித்துவிட்டு கிறு கிறென அரிவாளை வீசத் தொடங்கினார்கள். கிழக்கிலே சூரியக்கோளம் கிறு கிறென மேலேறித் தன் கொடுங்கிரணங்களால் அவர்களின் கன்னங்களைப் பொசுக்கியது. புது வேளாண்மையின் கோரமான சுணைக்குப் பாதுகாப்பாக அவர்கள் எல்லாருமே தரித்திருந்த பழைய முழுக்கைக் காக்கிச் சட்டைக்குள்ளே, அவர்கள் உடல்கள் சித்திரைப் புழுக்கத்தில் உருகிக் கொண்டிருந்தன. சற்று நேரத்திலேயே அவர்கள் அணிந்திருந்த சட்டைகள் தெப்பமாக நனைந்து உடலோடு ஒட்டிக்கொண்டு விட்டன. சுணையையும் தினவெடுத்துச் சொறியச் சொல்லும் அரிப்பையும் சட்டை செய்யாமல் குனிந்த குனிவில் கத்தியின் வளைவுக்குட் கதிர்த்தாள்களைக் கோதி, சக்திக்குள் அடங்கிய தாள்களை இடக்கையின் பிடிக்குட் சிக்க வைத்து ஒவ்வொரு பிடியும் நிரம்பியதும் கத்தியோடு அதை அணைத்துப் பின்னால் திரும்பிக் கதிர்த் தாள்களை 'உப்பட்டி'யாகப் போட்டவாறு. அணிஅணியாய் அருவி வெட்டிக் கொண்டு அவர்கள் முன்னேறினர்.
'வெட்டும் வெட்டை மதியம் திரும்புவதற்குள் வெட்டிவிட வேண்டும். மதியந் திரும்பிச் சாப்பிட்டுவிட்டால் அதன்பின் வேலை ஓடாது'
என்ற எண்ணத்தில் அவர்கள் மூசுமூசு என்று வெட்டிக் கொண்டேயிருந்தார்கள். கதிர்த் தாள்கள் அறுபடும் 'கறார் கறார்' என்ற ஓசையைத் தவிர அந்த வயல் வெளியிலே வேறு எந்த ஒசையும் இல்லை. வெதுவெதுப்பும், இறுக்கமுமான சித்திரையின் நிச்சலனம் மதியந் திரும்பினால் கொண்டலின் அசைவில் சற்று இளகலாம். அதுவரை ஒரே வெப்பம்...புழுக்கம்.
கதிர் அறுத்துக் கொண்டிருந்த சிவஞானம், திடீரெனக் கையைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு 'ஐயோ' என அலறினான். இடக்கை உள்ளங்கையின் கீழ்ப்பகுதியில் சின்னி விரலுக்குக் கீழுள்ள சதை மேட்டில் கருக்கரிவாள் வெட்டியதினால் இரத்தம் ஓடிக்கொண்டு இருந்தது. வேளாண்மைச் சுணையின் அரிச்சலோடும், சித்திரைப் புழுக்கத்தின் அகோரத்தோடும் வெட்டுக்காயம் ஏற்படுத்திய எரிச்சலில் சிவஞானம் துடிதுடிப்பதைக் கண்ட அவன் தந்தையார், தன் சமையலைப் போட்டது போட்டபடியே விட்டுவிட்டு வயலுக்குள் ஓடி வந்தார்.
சிவஞானத்தின் கையைத் தூக்கிப் பார்த்துக் "கள்ள வெட்டுக் காயம் அத்தான்" என்று சர்வ சாதாரணமாகச் சொன்ன சிவராசா, விரைந்து சென்று நீர்க்கரையிலே செழித்து வளர்ந்திருந்த 'கையறுப்பான்' என்ற தொடக்கறுத்தான் இலைகளைப் பிடுங்கி வந்து சொட்டுத் தண்ர்விட்டுக் கசக்கிக் காயத்தில் வைத்துக் கட்டிக் கொண்டே "இதுதானா இளந்தாரிர கெட்டித்தனம்" என்று கேட்டபோது சிவஞானம் அவமானத்தாற்குன்றிப் போனான். ஆயினும் அதற்குமேல் அவனால் வேலை செய்ய முடியவில்லை. மெதுவாகத் தந்தையோடு வயலை விட்டுக்கரையேறிக் குடிசையை அடைந்தபோது கோணாமலை சொன்னார்.
"இதுக்குத்தான் நான் சொல்றன் கவனமாகப் படி. நாங்க இந்தக் காட்டிலயும் கரம்பிலயும் கஷ்டப்பட்டு என்ன சுகத்தைக் கண்டம். நீயெண்டான படிச்சு ஒரு வாத்தியாரா வந்திரு."
வெட்டுக்காயத்தின் வேதனையோடு சிவஞானம் தன் தந்தையார் சொன்னதைக் கேட்டபோது, நான்கு மாதங்கட்கு முன்னால் நடந்தவைகள் ஞாபகத்திற்கு வந்தன.
'தை மாதம் பிறக்கப் போகின்றது. பொங்கலுக்கு இன்னமும் ஏழே ஏழு நாட்கள்தான் இருந்தன. இளக்கந்தைக்குளம் நிரம்பி வான்போடத் தொடங்கி விட்டது. அக்குளத்தை நம்பிப் பயிரிடத் தயாராக இருந்த கமக்காரர்கள் எல்லாரும் கடாப்பிணையல்களோடு 'வயல் அடிக்க' வந்து விட்டார்கள். பொங்கலுக்கு முன்னாற் வெருமிதியாவது மிதித்து விடவேண்டும் என்ற அவசரம்.
சிவஞானமும் தன் தந்தையாரோடுகூட வயலுக்கு வந்திருந்தான். கூலியாட்கள் வேறு மூன்து பேர்!
ஒவ்வொரு வரவைக்குள்ளும் படம் புதைய நீரைக் கட்டி வைத்து, அந்தச் 'சிலுவு' தண்ரில் கடாப்பிணையல்களை விட்டு வயலை உழக்கத் தொடங்கினார்கள். பழக்கப்பட்ட கடாக்கள் வயலைச் சேறாக்கும் முகமாக ஹேஹே என்ற கட்டைக் குரலுக்கு முன்னே நடந்து, 'ஹோஹோஹோ' என்ற நீளக் குரலுக்குப் வலம்வளைந்து வேடிக்கையாகவும் இருந்தது. ஓரோர் நாளையில் தனக்குப் பாடம் நன்கு விளங்காவிட்டால் 'கிடா மாடு' என்று தன்னைத் திட்டும் மிஷன் பாடசாலை ஞானமுத்து வாத்தியாரின் உலக அநுபவத்தையிட்டு அவனுக்குச் சந்தேகமாக இருந்தது. இந்த மாடுகட்கா அவர் அறிவில்லை என்கிறார்!
ஆனால் உற்சாகத்தோடு மாடு வளைத்துக் கொண்டு இருந்த சிவஞானத்திற்குச் சில மணி நேரத்துள் அலுப்புத்தட்டத் தொடங்கிற்று. கட்டிய நீரின் அடியிலே தரையோடு தரையாகப் படர்ந்திருந்த தொட்டாச் சிணுங்கியின் முட்கள் அவன் கால்களை நன்றாகப் பதம் பார்த்துவிட்டன. கீறிக் கிழிபட்ட அக்கால்களைத் தூக்கி மேலே ஒரு அடிகூட வைக்க அவனால் முடியவில்லை. எனவே மாடு வளைப்பதை விட்டுவிட்டு வெளியேறினான். ஆனால் அவன் தந்தையாரும் மற்ற இருவரும் எவ்விதச் சிரமமுன்றி மாட்டைவளைத்துக் கொண்டேயிருந்தனர். காட்டிலே இராமரின் பாதங்கள் பட்டபோது "காயெரிகனலுங் கற்கள் கள்ளுடை மலர்கள் போல்" குழைந்து தோன்றிற்றாம் என்று அவன் 'இராமர் கதை' என்ற கதை நூலிலே படித்திருந்தான். அதைப் போலவே 'விவசாய ராமர்களின்' கால்பட்டதும் தொட்டாச் சிணிங்கி முட்கள் பூக்களாகி விடுகின்றனவா? என்று எண்ணியபடியே வயல்வரப்பில் இருந்து கொண்டு முட்கள் கீறிக் கிழித்த தன் பாதங்களைத் தடவிக் கொண்டிருந்தான். அப்போதும் தந்தையார் சொன்னார்.
'இதுக்குத்தான் நான் சொல்றன் கவனமாப்படி. நாங்க எல்லாம் மாடெண்டும் வயலெண்டும் திரிஞ்சு என்ன சுகத்தைக் கண்டிற்றம். நீயெண்டான நல்லாப் படிச்சு ஒரு வாத்தியாரா வந்திடு'
ஆம்; அப்பாவின் வாழ்க்கை இலட்சியமே நான் நன்றாகப் படித்து ஒரு வாத்தியாராக வந்து விட வேண்டும் என்பதுதானா? என்று எண்ணிக் கொண்ட சிவஞானம் அலுப்பிலும், வேதனையிலும் அப்படியே அரிசிச் சாககிற் தலைவைத்துப் படுத்தபடியே நித்திரையாகிவிட்டான். மதியச் சாப்பாட்டிற்கு அவனை எழுப்பச் சிரமப்பட வேண்டியிருந்தது.
* * *
நாட்கள் உருண்டன. பிரபஞ்சத்தை நிறைத்து நின்ற இலையசையாப் பம்மலும் பொருமலும் திரிந்து தலைக்கச்சான் வீசத் தொடங்கையில் மழையும் பெய்தது. ஆயினும் அந்த வருடம் பாலை மரம் பழுக்கவில்லை. இரண்டு ஆண்டுகட்கொரு தடவை முறை வைத்துத்தான் பழுக்கும் என்ற விவகாரம் சின்னவனான விசுவத்துக்கும் தெரிந்திருந்தால் அம்மரத்திற் பழம் பிடுங்கவோ, அல்லது பழந்தின்ன வரும் புறாக்களைச் சுண்டு வில்லாற் குறிவைத்துத் தெறித்துக் கொல்லவோ சிறுவர்கள் எவரும் பாலைமரத்துப் பக்கம் வரவில்லை. ஆயின் கச்சான் காற்று அனற்காற்றாய் முற்றி அங்கிருந்த பற்றைகளும் பறுகுகளும் சருகாக உலர்ந்து காயத் தொடங்கியபோது அப்பாலை மரம் மட்டுமே ஊர்ரவர்க்கெல்லாம் கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர்தருவாய் கம்பீரித்தது. விறகு பொறுக்கிய பெண்கள் அதன் நிழலிலே பொறுக்கிய விறகுகளை ஒன்று சேர்த்துக் கட்டினார்கள். வயலிற்கும் காட்டிற்கும் சென்ற ஆண்கள் அம்மரத்தின் குளிர் நிழலிலே இளைப்பாறிச் சென்றார்கள் பக்கத்திலே காவலின்றி இருந்த தென்னந் தோட்டங்களில் திருட்டுத்தனமாக இளநீர் பிடுங்கிய சிறுவர்கள், விலாலிப் பற்றை மறவிலே இளநீர்களைக் குடித்துவீட்டுப் பாலைமர நிழலிலே சுவாவபூதியாகப் படுத்துறங்கினார்கள். இளக்கந்தை வயலிலிருந்து நெல் ஏற்றி வைத்த கோணாமலையும் அம்மரத்தின் கீழே வண்டியை நிறுத்தித் தன் வெள்ளை மாடுகளை ஆதுரத்தோடு முதுகில் தட்டிக் கொடுத்தார்!
அந்த ஆண்டு இளக்கந்தை வயல் நன்றாகவே விளைந்திருந்தது. அதன் பலனாக, இரண்டு அறைகளோடு விசாலமான முன் மண்டபமும் கொண்டிருந்த கோணாமலையின் வீடு, வெளிப்புறத்திலும் நீறு பூசி வெள்ளையடிக்கப்பட்டது. அவரது பழைய வண்டி செப்பனிடப் பட்டுப் புத்தம் புதியதே போலத் திருத்தப்பட்டது. அது மட்டுமல்ல. மாவலி நீர் பாயும் "இறையால் தீவு" வெளியிலே அவர் குத்தகைக்குக் கொடுத்திருந்த மூன்று ஏக்கர் நிலத்தையும் கடன் படாமலே விதைக்க முடிந்தது. எல்லாவற்றிற்கும் மேலாகக் கந்தசாமி கோவிலின் ஆடி உற்சவகத்தில் அவரதும் அவரது சகோதரர்களதும் உபயமான நாலாந் திருவிழாவில் வல் வெட்டித் துறையிலிருந்து சின்ன மேளம் எடுப்பித்த செலவையும் வாண வேடிக்கை காட்டிய செலவையும் தன்னந்தனியனாக அவராற் பொறுப்பேற்க முடிந்தது! இதுவரை கோணாமலையாக இருந்த தன் தந்தையார், அந்தத் திருவிழாவின் பின் கோணுமலையார் ஆகிவிட்ட பெருமையைச் சிவஞானத்தால் உணர முடிந்தது!
அடுத்த வருடம் தை மாதம் சிவஞானம் இளக்கந்தை வயலுக்குப் போகவில்லை. ஏழாம்வகுப்புச் சித்தியடைந்த அவன் பக்கத்துப் பட்டினமான மூதூர்ப் பாடசாலை ஒன்றிலே சேர்ந்து எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டு இருந்தான். காலையில் எழுந்து மூன்று மைல் தூரம் நடந்து பாடசாலைக்குச் சென்று மதியந் திரும்ப மீண்டும் ஆயாசத்தோடு. வீட்டுக்கு மீளும் தன் மைந்தனின் சிரமத்தை உணர்ந்த கோணுமலையார் சிவஞானத்திற்கு 'இரண்டாங்கையான்' துவிச் சக்கர வண்டி ஒன்று வாங்கிக்கொடுத்தார். சிவஞானமும் மாப்பிள்ளைபோலத் துவிச்சக்கர வண்டியிற் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்தான்.
அவன் அப்படிச் சென்று கொண்டிருந்தது ஊரவர் பலருக்கு எரிச்சலாக இருந்தது. அருவருப்பாகவும் இருந்தது. கோணாமலையின் நெருங்கிய உறவினனான சிவராசா.
"என்னத்தான்! உனக்கு இவன் மட்டுந்தானா ஒரே ஒரு பிள்ளை? இவனுக்குக் கீழ நாளைக்கக் குமராப் போறதுகளே இரண்டு இருக்கு. கைக்குதவியான பயலை இப்படிச் செல்லங் கொடுத்து வளர்த்தால் எப்படி உருப்படப் போறாய்? நாம என்ன படிச்சு ஏசுண்டு வேலையா பாக்கப் போறம். பயலத் தன் போக்கில விடாமல், பிடிச்சு உன்னோட காலக் கைய ஆட்டப் பழக்கு." என்று உரிமையோடு ஆனால் மனத்துள் சூயையோடு கடிந்து கொண்டான்.
'இவன் படிச்சிக் கிழிக்கத்தான் போறான்' வேறு சிலர் ஏளனமாகப் பேசி கொண்டார்கள். செய்யத்தகாத ஒன்றைக் கோணாமலையார் வலிந்து செய்வதாக ஊரிலே எல்லாருமே குறைபட்டுக் கொண்டார்கள்.
ஆனால் தன்னில் உக்கிரமாக மோதும் அலைகளைத் தன் மடியிலே வாஞ்சையோடு ஏற்றும், பின் தள்ளியும் கலங்காமலும் கரையாமலும் நிற்கும் கடற்கரையைப் போலக் கோணாமலையாரும் ஊரவர் கருத்தை ஏற்றும் ஏற்காததுமாய்த் தன் போக்கிலே நிலை கொண்டு இருந்தார்.
கால ஓட்டத்தில் சிவஞானம் கிணற்றங்கரையில் நிமிர்ந்து வளர்ந்து புதுப் பாளையை வீசத் தயாராக இருக்கும் இளங்கமுகைப் போல நெடுத்து வளர்ந்து விட்டான். வேஷ்டியைச் சண்டிக்கட்டுக் கொண்டு தெம்மாங்கு பாடியபடி மாடுபிடிக்கச் செல்லும் கிராமத்துப் பையனாக இல்லாமல் நாகரீகமாக உடுக்கவும், தனக்கு வயதில் மூத்தவர்களோடு மரியாதையாகப் பேசவும்-ஏன் தர்க்கம் செய்யவும் தெரிந்திருந்தான். கிராமத்தில் நடக்கும் நல்லதும் கெட்டதுமான காரியங்களில் கலந்துகொண்டு தேவாரமும் திருவாசகமும் பாடிய போது அவன் மதிப்பு உயரத்தான் செய்தது. அவ்வப்போது அரசாங்கக் காரியாலயங்களிலிருந்து வரும் கடிதங்களைப் படித்துச் சொல்லவும் அதற்குப் பதில் எழுதவும் ஊரவர் பலருக்கு அவன் உதவி தேவையாக இருந்தது. இந்த நிலையிலே பெருமையும் பெருமிதமும் கொண்டிருந்த கோணாமலையார், நான்காம் வருடத் தொடக்கத்தில், சிவஞானம் "நான் எஸ்.எஸ்.ஸ’. சித்தியடைந்து விட்டேன்" என்ற செய்தியைத் தெரிவித்தபோது செயற்கரிய செயலைத் சாதித்து விட்ட பெருமிதத்தில் ஆனந்தக் கண்ரோடு தன் மைந்தனை அணைத்துக் கொண்டார். அன்றைய தினத்தைப் பெருவிழாவாகவே தன் வீட்டிற் கொண்டாடினார்.
அன்று உள்ளூர் மிஷன் பாடசாலைத் தலைமை ஆசிரியரும் கோணாமலையாரின் வீட்டுக்கு வந்திருந்தார். பால்ய வகுப்புகளில் தன்னிடம் கல்விகற்ற சிவஞானத்திற்குத் தன் வாழ்த்துதல்களைத் தெரிவித்த ஞானமுத்து வாத்தியார் நான் ஆசிரியரானதன் பயனையே அடைந்துவிட்டதைப் போலப் பெருமைப்பட்டுக் கொண்டார்.
ஆமாம் மட்டக் களப்பிலிருந்து வந்து, கடந்த பத்து 'வருடக் காலமாக அந்தக் கிராமத்தையே தன் சொந்த ஊர் போல ஆக்கிக்கொண்டு வாழும் அவர் பாடசாலைக்கும் கிராமத்திற்குமாகச் சாதித்துவிட்ட சாதனைதான் என்ன? கிராமத்தவர் பலருக்கு அவர் எழுத்தறிவித்த இறைவனாக இருக்கலாம் ஆனால் அவரிடம் படித்த எவனாவது அந்தக் கிராமத்திலோ அல்லது வெளியிலோ ஒரு சின்ன உத்தியோகதிற்கூட இல்லையே என்பது அவர் மனதில் நீண்ட நாளாகவே இருந்து கொண்டிருந்தது. இன்றைக்குத்தான் அந்த ஊரிலே அவர் மாணவன் என்று சொல்லக்கூடிய ஒருவன் எஸ்.எஸ்சி. சித்தியடைந்து கொண்டிருக்கிறான்!
அந்தப் பெருமையில் திளைத்திருந்த ஞானமுத்து வாத்தியார் கோணாமலையாரிடம் சொன்னார்.
"நம்ம பாடசாலையிலும் இந்த மாதத்தில் 'அனுவல்' நடக்கும். அதிலே இன்னும் ஒருவருக்குச் சராசரி வரும். அந்த இடத்துக்குச் சிவஞானத்தைத்தான் எடுக்க வேணும். நான் ஒரு கடிதம் தருவேன். அதை கொண்டுபோய் மட்டக்களப்பில் மானேஜரிடம் கொடுத்தால் அவர் உடனேயே உங்க மகனுக்கு உத்தியோகம் கொடுப்பார்."
கோணாமலையாருக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. தன் மைந்தன் அப்பழுக்கற்ற வெள்ளை வேட்டியும் நீளக்கைச் சட்டையும் அணிந்து, காற் செருப்புக்கள் தாளமிசைத்துக் கட்டியங் கூறப் புத்தகங்களைக் கையில் எடுத்துக் கொண்டு கிராமத்துக் கிரவல் ரோட்டிலே தன் வீட்டிலிருந்து பாடசாலைக்கு செல்வது போன்ற பொய்ம்மாயத் தோற்றத்தை மனதிலே கற்பித்துக் கொண்டார். ஊரவர்கள் எல்லாரும்-வயது முதிர்ந்தவர்கள்கூடத் தெருவாற் தன் மகன் நடந்து செல்கையில் தோளிலிருந்த சால்வையைக் கையில் எடுத்துக்கொண்டு மரியாதையாக ஒதுங்கி நடப்பது அவர் மனக்கண்ணில் பளிச்சிட்டது. அரிவரி வகுப்பு மாணவர்கள் தன் மகனைச் சூழ்ந்து கொண்டு 'புது ஐயா' என்று கத்துவது மானசீகமாக அவர் காதுகளிற் கேட்டது. அந்தச் சொர்ப்பனா சுகத்தை அவரை அனுபவிக்கும்படி விட்டுவிட்டு ஞானமுத்து வாத்தியார் போய்விட்டார்.
ஆயினும் அவர் அவ்விஷயத்தை மறந்தே விடவில்லை. பாடசாலையின் வருடாந்தத் திரட்டு முடிந்த அடுத்த நாளே, இப்பாடசாலையில் இன்னும் ஒரு ஆசிரியருக்குச் சராசரி இருக்கிறதெனவும், அவ்விடத்திற்கு உள்ளூரிலேயே எஸ்.எஸ்.சி சித்தியடைந்திருக்கும் சிவஞானத்தை நியமித்து பாடசாலையின் வளர்ச்சிக்கு அத்தியாவசியம் எனவும் மானேஜருக்குக் கடிதம் எழுதி, அக்கடிதத்தைக் கொண்டு போய்க் கோணாமலையாரிடம் கொடுத்து, உடனே சிவஞானத்தை மட்டக்களப்பிற்கு அனுப்பி மானேஜரிடம் கடிதத்தைச் சேர்ப்பிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
சிவஞானமும் கடிதத்தை எடுத்துக்கொண்டு மனதிலே இன்பக் கனவுகளோடு அடுத்த நாள்காலையிலேயே மட்டக்களப்பிற்குப் புறப்பட்டான்.
* * *
யமன் திக்கான தென் திசையை நோக்கிச் 'சிவனே' என்றோடிய 'ஈஸ்ரண்பஸ்' தன் கடகடப்பையும் தட தடப்பையும் நிறுத்தித் தன் பயணத்தை முடித்துக் கொண்டபோது மட்டக்களப்பு நகரின் தெருவிளக்குகள் ஏற்றப்பட்டு விட்டன! சரிக மாமபா, மபத நீ நிசா எனப் பாடசாலைப் பாடும் நீரர மகளிர் வாழ்வதாக விபுலானந்த அடிகள் குறிப்பிடும் மட்டக்களப்பு வாலியின் நிர்ச்சலனமான நீர்ப்பரப்பில் மின்விளக்குகளின் ஒளி பிரதிபலித்துக் கொண்டிருந்தது.
பஸ்ஸ’லிருந்து இறங்கிய சிவஞானம் வாவிக்கரை ஓரமாகக் கண்வைத்த தொலைவுக்குத் தொடர்ந்து செல்லும் மின் விளக்குகளின் வரிசையையே வைத்த கண்வாங்காமற் பார்த்துக் கொண்டிருந்தான்!
** இ.தொ.kaviya14.mtf**
‘க்கியம் என்ன காரணத்திற்காக
** kaviya13.mtfன் தொடர்ச்சி**
'ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்' என்ற வாக்கியம் என்ன காரணத்திற்காக வழங்கி வருகின்றதோ, ஆனால் பெரு நிலத்திலிருந்து புளியந் தீவைப் பிரித்து ஆலவாயை வளைத்த அரவமாய் வளைந்து கிடக்கும் வாலி மட்டக் களப்புப் பட்டினத்தை அழகு செய்ய அந்த அழகே அதன் சுயமாய், அந்தக் கீழைக்கரைத் தலை நகர் அந்தி மயக்கத்தின் மஞ்சள் ஒளியில் காவிய காலத்துப் பூம்புகார் அப்படினத்தை முதன் முறையாகத் தரிசித்த சிவஞானத்தின் கண்களிற் தோற்றமளித்தது அந்த அழகு மயக்கில் சிவநேரம் தன் கண்களை லயிக்கவிட்டிருந்த சிவஞானம் தீவையும் பெரு நிலத்தையும் இணைத்த பாலத்தைப் பார்த்தான். பாலத்தின் மதகுகளில் திரைப்பட விளம்பரங்கள் ஒட்டப்பெற்றிருந்தன. சிவஞானம் விளம்பரங்களைப் படித்தான்.
'காலம் மாறிப் போச்சு' என்ற படம் இம்பீரியல் பட மாளிகையில் ஓடிக் கொண்டிருப்பதாக ஒரு விளம்பரம் சொல்லிற்று!
அவ்விளம்பரத்தைக் கண்டதும் மூதூர்ப் பாடசாலையிலே அவனுக்குச் சரித்திர பாடங் கற்பித்த பொன்னம்பலம் மாஸ்ரரின் ஞாபகம் வந்தது. அவர் ஒருநாள் ஆவேசத்தோடு சொன்னார்.
"பொருளற்ற புராணக் குப்பைகளைப் படமாக்கிக் கொண்டிருந்த தமிழ் சினிமாக்காரர்கள், அதன் பின்னால் சரித்திரப் படங்கள் என்ற நினைப்பில் சரித்திரமும் அல்லாத புராணமும் அற்ற இரண்டுங் கெட்டான் கதைகளைத் தயாரித்து அக்கதைகளிடையே கனகவிசயன் தலையிலே கல் சுமத்திய கதையையும், இமயத்திலே மீன் 'பொரித்த' கதையையும் கதாபாத்திரங்களின் வாயிலாகப் பேச வைத்துத் தமிழனுக்கும் தமிழுக்கும் பெருமைதேடிக் கொண்டு விட்டதாகச் சுயதிருப்தி பெருமை தேடிக் கொண்டு விட்டதாகச் சுயதிருப்தி கொள்கிறார்கள். இன்னும் சிலர் 'கோட்'டிலி அர்த்தமற்ற அடுக்குத் தொடர்களைப் பொழிந்து தள்ளுவதுதான் சமூகக் கதை என்று எண்ணித் தம்மைத தாமே ஏமாற்றிக் கொள்கிறார்கள். இந்த நிலையிற் சமூகத்தின் பரிணாம வளர்ச்சியை-அவ்வளர்ச்சி மூலம் அடைய வேண்டிய சமுதாய மாற்றத்தை விளக்குவதாய், 'காதல் கூதல்' என்று தமிழ்ப் படத்திற்கே மட்டும் சொந்தமான அசட்டுத்தனங்கள் ஏதுமின்றி ஓர் தெலுங்குக் கதையைச் துணிச்சலோடு படமாக்கியிருக்கிறார்கள். சந்தர்ப்பம் கிடைத்தாற் 'காலம் மாறிப் போச்சு' என்ற அந்தப் படத்தை நீங்கள் எல்லாரும் பார்க்க வேண்டும்."
அவர் பேச்சு ஞாபகம் வரவே மானேஜரிடம் சென்று தான் வந்த வேலையை முடித்துக்கொண்டது இரண்டாங் காட்சிக்காவது படம் பார்க்கச் செல்ல வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டவனாக, ஞானமுத்து வாத்தியார் கற்பித்திருந்த குறிப்புகளின் பிரகாரம் மானேஜரின் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
புளியந்தீவுப் பாலத்தின் இரு கரைகளிலும் வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் இருந்த பலர் 'காற்று வாங்குவதற்காக'க் கூடி நின்றார்கள். இளைஞர்களான சிலர் பாலத்தின் கம்பிகளிற் பிருஷ்டகாலை ஊன்றி தங்கள் நிலையைச் சமனப்படுத்திக் கொள்வதற்காக முதுகைக் கூனாக்கி முன்வளைந்து சர்க்கஸ் வித்தை செய்து கொண்டிருந்தார்கள். அந்திக் கருமை படர விழித்துக் கொண்டு விடும் பட்டினத்து அழகு, முகப்பூச்சுகளின் இலவச விளம்பரமாய் பாலத்துக் கம்பிகளிற் குந்திக் கொண்டிருக்கும் இளைஞர்களை அருவருத்து ஒதுங்கிக்கொண்டு பாலத்தின் இரு கரைகளிலும் வழிந்து கொண்டிருந்தது.
சிவஞானம் நடந்து கொண்டேயிருந்தான். சற்று முன்னே பூம்புகாராகக் காட்சியளித்த மட்டக்களப்பு நகரின் துர்க்கந்தம் அவன் மூக்கைத் துளைக்கத் தொடங்கியது. நகருக்கு அழகூட்டுப் இந்த வாவிக் கரையா, நகரின் குப்பைகளைக் கொட்டும் குப்பைத் தொட்டியாகவும் அமைய வேண்டும்? என்று மனம் வெதும்பியவனாய் நடந்த சிவஞானத்திற்கு பாலத்திலே வெள்ளை வேட்டியும் சட்டையும் அணிந்து நிற்கும் பலர் உடையிலே மட்டும் அல்ல; பாலையும் நீரையும் பிரித்துப் பாலையே குடிக்கும் அன்னத்தைப்போல குப்பைக் குழியிலே இருந்து வரும் காற்றைப் பிரித்து வாவி நீர்ப் பரப்பிலிருந்து வரும் சுத்தக் காற்றை மட்டுமே சுவாசிக்கும் அமானுஷய சாதனைபடைத்தவர்கள் என்றெண்ணிக் கொண்டே அந்த எண்ணம் அவனுக்கே சிரிப்பைத் தர மானேஜர் வீட்டை நோக்கி நடந்தான். அவன் மானேஜரின் இருப்பிடத்தைத் தேடிப்பிடித்த போது, மாதா கோயிலிலே செத்தவர்களை நினைத்து பிரார்த்திப்பதற்காக அடிக்கப்படும் இளைப்பாற்றி மணி ஒலித்தது.
* * *
அவன் மானேஜர் வீட்டை அடைந்தபோது செத்தவர்களை நினைந்து பிரார்த்திப்பதற்காக ஒலிக்கும் இளைப்பாற்றி மணிவிட்டு விட்டு ஒலித்தது!
அந்த ஒலி அடங்கியபோது, தன் அறையின் முன்னாற் தாழ்வாரத்திலே கையிற் செபப் புத்தகத்தோடு உலாவிக் கொண்டிருந்த சுவாமியாரிடம், சிவஞானம் அடக்க ஒடுக்கமாக ஞானமுத்து வாத்தியார் கொடுத்த கடிதத்தை நீட்டினான். சிவஞானத்தை ஏற இறங்கப்பார்த்த பாதிரியார் கடிதத்தைப் பிரித்துப் படித்தார்.
சிவஞானத்தின் இதயம் வேகமாக அடித்துக் கொள்ளத் தொடங்கிற்று.
கடிதத்தைப் படித்த பாதிரியாரின் முகத்தில் எந்தச் சலனமுமே ஏற்படவில்லை. நியம நிஷ்டைகளால் பழக்கப்படுத்திக் கொண்டுவிட்ட பற்றற்ற தன்மையே!
சிவஞானம் ஆவலோடு அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
கடைசியாகப் பாதிரியார் சொன்னார்.
"தம்பி விஷயம் பிந்திப் போய் விட்டது. நான் அந்த இடத்திற்கு ஏற்கனவே ஒருவருக்கு வாக்குப் பண்ணிவிட்டேன், இப்போது ஏதும் செய்ய முடியாது."
அவர் கூறிய வார்த்தைகள் சிவஞானத்தைக் கல்லாய்ச் சமைத்து விட்டனவோ! அவன் உள்ளுணர்வுகள். மனத்துடிப்புகள் எல்லாவற்றையுமே ஸ்தம்பிக்கச் செய்து விட்டனவோ! சிவஞானம் அடித்து வைத்த சிலையாக அப்படியே நின்றான்!
இருவரும் நின்றனர்.
அறைக்குள்ளே மேசை மணிக்கூட்டிலிருந்து வந்த டிக்டிக் என்ற சப்தம் மட்டும் அவர்கள் இருவரது மௌனத்திற்குப் பகைப் புலமாக மோனத்திருந்த அந்த நிமிடங்களை வினாடித் துண்டுகளாக வெட்டி வெட்டிவைத்துக் கொண்டிருந்தது. அம்மௌனத்தைக் கலைத்த பாதிரியார் மீண்டும் சொன்னார்.
"தம்பி ஏன் நிக்கிறாய்? இப்போது ஒன்றுமே செய்ய முடியாது. இன்னமும் இரண்டு மூன்று மாதங்களில் திரிகோணமலைப் பகுதியிலே வேறு பாடசாலைகளில் புதிய இடங்கள் வரலாம். அப்போது உம்மைக் கவனித்துக் கொள்கிறேன். இப்போது நீர் போகலாம்."
இப்படிச் சொன்ன பாதிரியார் மீண்டும் தன் செபப் புத்தகத்தை விரித்துக்கொண்டு உலாவத் தொடங்கினார். உலகக் கவலைகளிலிருந்து விடுபட்டு நினைத்த மாத்திரத்தில் கடவுளோடு உறவாடவும் பேசவும் அவர் பயிற்சி அளிக்கப்பட்டவர்!
ஆனால் அவர் வார்த்தைகளினால், ஓங்கி உயர்ந்து நின்ற கோயில் கோபுரம் அப்படியே வீழ்ந்து நசுங்கி விட்டது போலவும், காலடியிலே நிலம் பிளந்து அப்படியே தன்னை விழுங்கிவிட்டது போலவும் இருந்தது சிவஞானத்திற்கு. மனக்கோட்டைகள் நொறுங்கி வீழ்ந்த அதிர்ச்சியில் அடுத்து என்ன செய்வது என்ற பிரக்ஞையே அற்றவனாக மீண்டும் வந்த வழியில் நடக்கத் தொடங்கினான். மின்சார விளக்குகளின் ஒளி வெள்ளத்தில் முக்குளித்துக் கொண்டிருந்த பட்டினத்துத் தெருக்களில் அவன் சென்ற வழி மட்டும் இருட்டாகவே இருந்தது. செல்லும் இடமும் இருட்டாகவே இருந்தது. சிந்தையே இருண்டு விட்டதே
வ.அ

தெய்வம் ஆசி வழங்குகிறது
தெய்வம் ஆசி வழங்குகிறது
வழக்கம் போல அதிகாலை பஸ்ஸைப் பிடித்துப் பத்து மைல்கள் பயணம் செய்து சந்தியில் இறங்கிய ஆசிரியர் சுந்தரலிங்கம், ஐப்பசி மாதத்து மழையைத் தாக்குப்பிடித்து ஒருமைல் தூரம் சேற்று வழியில் பதனமாக நடந்து பாடசாலையை அடைந்தபோது, எதிர் வீட்டுக்காரன், நேற்று வந்த கடிதத்தை அவரிடம் நீட்டினான்.
அதிபர் என்ற பொது விலாசத்திற்கு வராமல், அவரது சொந்தப் பெயருக்கு வந்த அரசாங்கக் கடிதம் என்பதனால் ஆசிரியர் அக்கடிதத்தை எடுத்துப் பரபரப்புடன் படித்தார். ஒருமுறைக்கு இரண்டு மூன்றாந் தடவையாக அதைப் படித்தார்.
1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நான்காம் திகதியுடன் உமக்கு ஐம்பத்தைந்து வயது பூர்த்தியாகி விடுகின்றது. அன்றைய தினமோ அதற்கு முன்னரோ பாடசாலைக்குரிய சகல பொருட்களையும் பிரதம உதவீஆசிரியடமோ அல்லது நாம் குறிப்பிடும் வேறு யாராவது ஒருவரிடமோ ஒப்படைக்க வேண்டும். உமது உபகாரச் சம்பளம் சம்பந்தமாக இத்திணைக்களத்தோடு தொடர்பு கொள்ளவும், சேவை நீடிப்புத் தேவையாயின் ஆறு மாதங்களுக்கு முன்னதாக எமக்கு விண்ணப்பிக்கவும்.
மீண்டும் ஒரு முறை அக்கடிதத்தைப் படித்தார் சுந்தரலிங்கம்.
சேவை நீடிப்பு....!
சுந்தரலிங்கத்தார் தன்னை அறியாமலே புறுபுறுத்துக் கொண்டார்.
"இந்தச் சேவை நீடிப்பு யாருக்கு வேண்டும்? எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் என்று பழைய வாக்கியம் இருக்கத்தான் செய்கிறது. "ஆசிரியன் நாட்டின் அச்சானி. அவர்களடைய சேவை மிகமிக மகத்தானது" என்று பேசிக்கொள்ளாத அரசியல்வாதியே கிடையாது தான்.
ஆனால், அந்த மகத்தான சேவையைச் செய்துவரும் "இறைவனுக்கு" நாட்டில் உள்ள அந்தஸ்துதான் என்ன?
ஆசிரியர் சுந்தரத்தின் மனப்பாம்பு. இறந்தக்காலச் சருகுகளில் சரசரவென்று ஊரத்தொடங்கியது.
முப்பத்து மூன்று ஆண்டுகளின் முன்னே, வெள்ளைக்காரனின் ஆட்சி அஸ்தமித்து, இந்த நாடு சுதந்திரோதயத்தைத் தரிசித்துக்கொண்டிருந்த பொற்காலம். அந்தக் காலத்திலேதான் அவர் ஆசிரியப் பயிற்சியை முடித்துக் கொண்டு வெளியேறுகிறார்.
மூன்று மாதங்களின் பின்னால் அவருக்குப் புருஷ லட்சணமான உத்தியோகம் கிடைத்தது.
"நான் அழகாகத்தான் இருப்பேன்" என்று அடம்பிடித்துக்கொண்டு நிற்கும் கண்டி நாட்டின் நித்திய சௌந்தர்யம் இருபத்திரண்டு வயது இளைஞரான அவரைச் சொக்குப் பொடி போட்டு மயக்கிற்று. பசுமை போர்த்த மலைகள், மலக்குவடுகளிலிருந்து உருக்கிய வெள்ளியாய் இழிந்துவரும் நீரோடைகள், கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் புஷ்பித்துக் கிடக்கும் பள்ளத்தாக்குகள் எல்லாமே அவரைக் கவிஞனாகவே மாற்றிவிட்டன.
ஆனால் இந்நாட்டின் சுதந்திரோதயம் அந்தக் குறிஞ்சி நாட்டு உழைப்பாளிகளின் உரிமைகளைப் பறித்தபோது; நாளைக்கு இதுதானே நமக்கும் நடக்கப் போகின்றது என அவர் உள்ளுணர்வு சொல்லிக் கொள்கையில் அவரது கவித்துவம் "தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டு" நிர்க்கதியாக நிற்கும் அத்தொழிலாள் மக்களுக்காகக் கண்ர் வடித்தது. அவரது மன உளைச்சல்கள் நிர்க்கதியாகிவிட்ட அச்சமூகத்துக் குழந்தைகளுக்கு ஆகக்குறைந்தது எழுத்தறிவையாவது புகட்டிவிட வேண்டும் என்ற கர்ம யோகமாய் அவருள் விரிந்தன.
ஆ! இந்தத் தொழிலாள வர்க்கத்துக்குத்தான் எழுத்தறிவிக்கும் இறைவன்மேல் எத்தனை மரியாதை!
ஓருநாட் சாயங்கால வேளை.
மலைக்குவடுகளில் வீசியெறியப்பட்ட சாம்பலின் மூட்டமாக மேகம் படர்ந்து கொண்டிருந்தது. சற்று முன்னர் பெய்த ஒரு பாட்டம் மழையில் தலைமுழுகிய தேயிலைச் செடிகளின் குமரியழகைத் தலை நீட்டிய தளிர்களில் தரிசித்தவராக அவர் "சித்தம் போக்கு சிவம் போக்காக" நடந்து கொண்டிருந்தார்.
அருமையான அமைதி...! தூரத்தே தேயிலைத் தொழிற்சாலையிலிருந்து வரும் ஓசை, அந்த அமைதியைக் குலைக்கத் திராணியற்றதாய், அந்த அமைதியில் அடங்கிற்று.
சுந்தரம் நடந்து கொண்டேயிருந்தார்.
அவருக்கு எதிராக வந்துகொண்டிருந்த அவரது சக ஆசிரியர் கேட்டுக்கொண்டார்.
"மாஸ்டர் கொஞ்சம் கெதியாக நடவுங்கள்."
"ஏன்.....?"
"ஏனா....? பின்னால் திரும்பிப் பாருங்கள். தங்கள் வேலை முடிந்து தொழிலாளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உங்களைத் தாண்டி முன்னால் செல்ல முடியாமல்..."
"ஏன் அவர்கள் போவதை நாங்கள் தடுத்தேனா...?"
"தடுப்பது போலத்தான். அவர்கள் உங்களை முந்திக் கொண்டு போகமாட்டார்கள். இது அவர்கள் நமக்குக் காட்டும் மரியாதை...."
சுந்தரம் திரும்பிப் பார்க்கிறார். புல்லுக் கத்திகள், முள்ளுக்கிண்டிகள் சகிதம் பத்துப் பதினைந்து தொழிலாளர்கள். அவர் ஓரமாக ஒதுங்கிக் கொண்டு "நீங்கள் போங்கள்" என்கிறார்.
அத்தொழிலாளர்கள் தோளிலிருந்த ஆயுதங்களைக் கையிலெடுத்தபடி அடக்கமாக அவரைத் தாண்டிச் செல்கின்றனர்.
ஆசிரியருக்கு மெய்சிலிர்க்கிறது! ஏற்கனவே கர்மயோகமாக அவருள் விடிந்துவீட்ட "இறைவன் சேவை" அந்தக்கணமே பக்தியோகமாய், அந்த யோகமே அவருக்கு எல்லாமாய்... கீதோபதேசம் குருசேத்திரத்தில் மட்டுமா நடக்க வேண்டும்?
இதெல்லாம் பழைய...பழைய கதை...
மலையகத்து மக்கள் சிவனாரின் தென்னாட்டில் இருந்து வந்தவர்களின் பரம்பரையினர்தான். ஆனால் அவர்கள் ஐந்தொழில் புரியும் அம்பலவாணராயல்ல; அப்படியிருந்திருந்தால் மதுரை மாறனின் பிரம்படி அந்தக்கணத்திலேயே அண்டசராசரங்களின் மீதும் பட்டது போலச் சுதந்திரோதய காலத்திலேயே அவர்கள் மேலே விழுந்த அடி நம்மீதும் பட்டிருக்கும்.
ஆனால் அந்த அடி ஐம்பத்தாறில் விழுந்தது. அடுத்த அடுத்த ஆண்டுகளில் சுந்தரம் ஊருக்கு மாற்றம் பெற்றார்.
மலைநாட்டுச் சேவைக் காலத்திலேயே அவருக்கு ஊரிலே திருமணமாகியிருந்தது. "ஊரோடு மாற்றம்" என்ற ஜ“வன்முக்தி இப்போது அவருக்குச் சித்தித்திருந்தாலும் ஆண்டுகள் வளரவளரக் குடும்பச் சுமையும் கூடிக் கொண்டுதான் வந்தது. ஆனால், என்றைக்கோ கர்மயோகமாய் விடிந்துவிட்ட அவரது சேவைமனப்பா மை அல்லும் பகலும் பாடசாலை மாணவர்கள் என்றே சிந்திக்க வைத்தது.
அந்தச் சிந்தனை திறமை மிக்க ஆசிரியர் வரிசையில் அவரைச் சேர்த்தது.
ஆனால் திறமையும் சேவை மனமும் இருந்தால் மட்டும் போதுமா...?
அவருக்கு வளைந்து கொடுக்கத் தெரியவில்லை. எவருக்கும் கூழைக்கும்பிடுபோட அவரால் முடியவில்லை. 'காக்காய் படிக்க" மனமில்லை. ஆகவே, அவரோடு-ஏன் அவரு ககுப் பின்னாலும் சேவைக்கு வந்தவர்கள் பலரும் அதிபராக உயர்ந்தபோதும் சுந்தரம் ஆசிரியராகத் தான் இருந்தார்.
"என் சேவை மூப்புக்காக என்னை அதிபராக்கட்டும், அல்லது நிருவாக ரீதியான பரீட்சைப் பேறுகளின் அடிப்படையில் எனக்குப் பதவி உயர்வு தரட்டும். எந்த அரசியல்வாதியினதும் சிபார்சில் எனக்குப் பதவி உயர்வு தேவையில்லை" என்று அவர் நெஞ்சை நிமிர்த்தியதில் அவரிலும் சேவை மூப்புக் குறைந்தவர்களின் கீழ் உதவி ஆசிரியராகச் சேவை செய்யவேண்டிய நிர்பந்தத்துக்கு அவர் ஆளானார்.
ஆனால் அவர் அதைப்பற்றிக் கவலைப்படவேயில்லை:
காலம் மாறும் என்ற நம்பிக்கை அவருக்கிருந்தது. "உலகத் தொழிலாளர்களே ஒன்று பருங்கள்" என்ற தத்துவார்த்த கோஷத்தில் நம்பிக்கை கொண்ட அவர், தொழிற்சங்க அங்கத்தவராகிக் கொண்டு "பயிற்றப்பட்ட ஆசிரியர்களுக்கு மொழி அடிப்படையில் சம்பள வித்தியாசம் இருக்கக் கூடாது. எல்லோருக்குமே சம சம்பளம் வேண்டும். எந்த ஆசிரியரும் கடமையினிமித்தம் கந்தோருக்கோ அல்லது வேறெங்கோ சென்றாலும், ஏனைய அரசாங்க ஊழியருக்குப் போல அவர்களுக்கும் பிரயாணச் செலவும், படிச்செலவும் வழங்கப்படல் வேண்டும்" என்று உரத்துக் குரல் எழுப்பினார்.
அவரது குரலுக்குப் பதில் கிடைக்காமலுமில்லை. சம சம்பளம் என்ற கோரிக்கை வெற்றியடைந்ததாகத் தோன்றியபோது, அவரது மாணவனாக இருந்த ஆசிரியருக்கும் அவருக்கும் ஒரே சம்பளம் கிடைத்தது! ஆகக் குறைந்தது மூன்று வருட சேவைக்கு ஒரு வருடச் சம்பள உயர்வாவது தேவை என்ற கோரிக்கை இன்னமும் கோரிக்கையாகவே இருக்கின்றது.
** இ.தொ. kaviyam6.mtf** வார்த்தை
** kaviyam5.mtf ன் தொடர்ச்சி**
பிரயாணச் செலவு, படிச்செலவு என்பன வார்த்தைகளில் வடிக்க முடியாத வேய்ங் குழலின் இனிய நாதம் போல இன்னமும் நாதரூபமாகவே இருக்கின்றது.
ஆனால் ஆறு ஆண்டுகளின் முன்னால் பரீட்சை ஒன்று எழுதிச் சித்தியடைந்ததில் அவர் அதிபராக உயர்ந்து விட்டார்.
ஆனாலும் அதனால் என்ன பயன்....?
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னே அவரது மாணவனாக இருந்தவன், எந்த அரசியல்வாதியையோ பிடித்து வங்கி உத்தியோகத்தன் ஆகிக் கொண்டு முப்பத்து மூன்று வருடங்கள் மட்டையடித்த அவரைவிட அதிகமாகச் சம்பளம் பெறுகிறான்.
மகா வித்தியாலயங்களில் பொருட் கணக்கெடுக்க வரும் தமது அலுவலக உத்தியோகத்தர்களோடு ஒரு சில ஆசிரியர்களும் அதே வேலையைச் செய்யப் பணிக்கப்படுவார்கள். கந்தோர் எழுத்தாளர்களுக்குப் பிரயாணச் செலவு. படிச்செலவு வேறு. ஆனால் ஆசிரியர்களுக்கு....?
அரசியல்வாதிகள் "ஆசிரியத் தொழில் மகா புனிதமானது" என்று சொல்லிச் சொல்லியே தமது வர்க்கத்தினரின் தலையில் மிளகாய் அரைக்கிறார்கள். அவர்களிடம் அரைபட்டது போதும் என்று நாட்டின் அறிவாளிகள் நைஜ“ரியாவிற்கு ஸாம்பியாவிற்கும் செல்கிறார்கள்.
அந்த வசதியற்றவர்கள், ஒய்வு பெறுபதைத் தவிர வேறு வழியேயில்லை.
சுந்தரத்தின் நினைவு இழைகள் படீரென அறுபட்டது போலத் தோன்றிற்று. கண்ந்தான். ஆயினும் தன்னைச் சுற்றி நூலிழை பின்னும் பட்டுப்புழுவின் துரிதத்தோடு மீண்டும் நினைவு இழைகளை அவர் மனம் பின்னிக்கொள்கிறது.
வயிற்றுக்கும் வாய்க்குமே போதாது என்ற நிலையில் தான் அவரது சம்பளம். இந்த லட்சணத்தில் பிள்ளைகளின் "போடிங்" செலவு வேறு! எத்தனைதான் செட்டாகச் சீவித்தாலும் கடன்தான் மிஞ்சுகிறது. இந்த அழகில் மாதாமாதம் கிடைக்கும் வருமானமும் அடுத்த மே மாதத்துடன் நின்றுவிட்டால்....
சுந்தரத்தால் அந் நினைவைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. நமது கந்தோர் என்ன நாம் ஒய்வுபெற்ற அடுத்த மாதமே உபகாரச் சம்பளத்தைத் தந்துவிடப் போகிறதா? அதற்குப் பலமாதங்கள் -ஏன் வருடங்கள் கூட ஆகலாம்.... உபகாரச் சம்பளத்தைப் பெறுமட்டும் எப்படித்தான் காலந்தள்ளுவது? சில்லென்றடிக்கும் ஐப்பசி மாதத்து வாடைக் கடுவலிற்கூட அவருக்கு வியர்த்தது.
நேற்றிரவு தன் சகதர்மினியிடம் நடத்திய சம்பாஷணை அவர் ஞாபகத்திற்கு வந்தது. அவள் கேட்டாள்.
"இப்பவே பென்ஷனுக்குப் போய் என்ன செய்யப் போறீங்க? அரசாங்கம் அறுபது வயசுவரை சேவை நீடிப்புத் தருகுதாமே..."
"இன்னமும் ஐஞ்சு வருஷமா? என்ர ஐம்பத்தைஞ்சு வருஷ வாழ்க்கையில் நாற்பத்தெட்டு வருஷம் பள்ளிக்குப் போய் அலுத்துப் போச்சு..." என்று சொல்லிச் சிரித்தார் அவர்.
அவரது நகைச்சுவையை விளங்கிக்கொள்ளாமல் அவர் மனைவி அலமருகையில் சுந்தரம் அதற்கு விளக்கம் சொன்னார்.
"பிறந்ததிலிருந்து ஐஞ்சு வருஷம் பள்ளிக்குப் போகல்ல. பிறகு எஸ்.எஸ்.சியைப் பாஸ் பண்ணிற்று ரெயினிங் கொலிஜ் போறவரைக்கும் இரண்டு வருஷம் பள்ளிக்குப் போகல்ல. மற்றக் காலமெல்லாம்-சரியா நாப்பத்தெட்டு வருஷம் பள்ளிக்குப் போய்ப் போய் அலுத்துப் போச்சு...."
"என்ன செய்றது, இன்னமும் இரண்டு வருஷமாவது போகத்தான் வேணும். அதுக்குள்ள மூத்த மகளுக்கு ஒரு வழி பிறந்..."
"அந்த வழி நான் உத்தியோகம் பாத்தாத்தான் பிறக்குமாம்...? எனக்கென்னவோ இந்த உத்தியோகமே அலுத்துப் போச்சு. அதிலயும் இப்ப படிப்பிக்கிற பாடசாலையில் படிப்பிக்கிறதே பெரிய வேதனையா இருக்கு. என்ர தரத்துக்கு நான் ஒரு பெரிய பாடசாலையிலே அதிபராக இருக்க வேண்டியவன்."
"இந்தக் கெறுவாலதானே ஏற்கனவே, உங்களுக்கு மூணாந்தர அதிபர் பதவி கிடைக்கல்ல. போய்வந்த இன்ரெ வியுக்கு அது கிடைக்கிற வரைக்கும் நீங்க கொஞ்சம் அமைதியாயிருங்க. அது கெடைச்சாக் கெடைக்கிற பென்ஷன்லயாவது பத்துப் பதினைஞ்சு வரக் கூடாதா?"
"இன்ரெயியூக்குப் போய் மூணு வருஷமாச்சு. அந்தப் பைல் எல்லாம் எந்தக் குப்பையில கிடைக்கதோ! அதுவாற தாயிருந்தாங்கூட நான் இன்னமும் சேவையில் இருக்க விரும்பல்ல. எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பகடைக் காயாத் தள்ளப்பட்டு மாற்றம் பெறுபவன் வாத்தியார் மட்டுந்தான். வேற எந்தக் கந்தோர் பியோனைக்கூட மாத்த ஏலாது. ஐம்பத்தைஞ்சுக்குமேல ஒரு நிமிஷமும் நான் வேலை பார்க்கவே மாட்டேன்..."
"வேலையில்லாம என்ன செய்யப் போறீங்க"
"செய்யிறதா? நம்மூர் மகாவித்தியாலயத்திற்கு முன்னால கடலைத்தட்டி வைச்சி யாவாரம் பண்ணுவன். அப்பவாச்சும் தொறக்க வேண்டியவர்கள்ர கண் தொறக்கட்டும்...."
அவர் மனைவி நாடியைத் தோள்பட்டையில் இடித்துக் கொண்டு வேகமாக அடுக்களைக்குள் சென்று விடுகி‘ள்.
தனது தீவிரத்தின் மன உளைச்சல்களோடு சுந்தரம் சாய்கதிரையில் படுத்திருக்கையில் அடுத்த தெருச்செல்லையா அவரைத் தேடிக் கொண்டு வருகிறார்.
"மாஸ்டர், உங்களிட்டைத்தான் வந்தன்...."
"எனக்கிட்டவா? என்ன சங்கதி அண்ணன்....?"
"வேறொன்றுமில்ல மாஸ்டர். என்ர மூத்தமகன்ர வியாதிய இங்க ஒருத்தரும் கண்டுபிடிக்கிறாங்க இல்ல. திருகோணமலைப் பெரியாஸ்பத்திரிக்குப் போய் எக்ஸ்ரே எடுக்கட்டாம். அங்க இருக்கிற டாக்குத்தர் ராமலிங்கம் உங்கட மாணவன் என்று சொல்வீங்களே, அவருக்கு ஒரு கடிதம் தந்தீங்க என்றா வசதியா இருக்கும்..."
சுந்தரத்தின் மனஉளைவுகள் கீழ் வெளியேறிவிட்ட புண்ணாகச் சற்று இதமடைந்தன.
"இருபது இருபத்திரண்டு வருஷத்துக்கு முன்னால் திருகோணமலைப் பட்டினத்தில அவனுக்குப் படிப்பிச்சன். ஆனாலும் இப்பவும் அவன் என்னை மறக்க மாட்டான்" என்று சொல்லிக் கொண்டே கடிதத்தை எழுதிச் செல்லையாவிடம் கொடுத்தார். அவரது சிறுமைகளை, அவரது வீழ்ச்சிகள், அவரது மன உளைவுகள், அவரது வேதனைகள் எல்லாமே அவரை விட்டு அகல. மலையாய் உயர்ந்து நின்ற சுவானுபூதத் தெம்புடன் ஆசிரியர் படுக்கைக்குப் போனார்!
பாடசாலையில் சலசலப்பு அதிகமாயிற்று. ஊதற்காற்றோடு துமித்துக் கொண்டிருந்த மழை நின்று விட்டதும், பாடசாலைக்குப் பிள்ளைகள் வரத்தொடங்கி விட்டார்கள். நேரமும் எட்டரைக்கு மேலாகிவிட்டது.
உதவி ஆசிரியர் வருவாரோ வரமாட்டாரோ! லீவுக்கடிதம் வந்தாலும் வரலாம். அவர் மந்திரியின் ஆள்!
ஆசிரியர் மணியை அடித்துப் பாடசாலையைத் தொடங்குகிறார். பிள்ளைகள் நிரைத்து நிற்க மூன்றாம் வகுப்பு மாணவன் ஒருவன் தேவாரம் பாடுகிறான்.
"சலம்பூவோடு தூபம் மறந்தறியேன்"
மற்றவர்களை அவனைத் தொடர்கிறார்கள்.
பிரார்த்தனை முடிந்து மாணவர்கள் வகுப்புக்குச் சென்றதும் ஆசிரியர் பரம்பரமாகிறார்.
நான்காம் ஐந்தாம் வகுப்புக்குக் கரும்பலகையில் கணக்குகளை எழுதிவிட்டு மூன்றாம் வகுப்புக்கு மொழிப் பயிற்சியாக எழுத்து வேலை கொடுத்து முதலாம் இரண்டாம் வகுப்புகளை ஒன்றாகச் சேர்த்துக் கதை சொல்ல முனைகையில் அவர் மனம் மீண்டும் எங்கோ தாவுகிறது.
அரசாங்கத்தின் சுற்று நிருபப்படி இந்தப் பாடசாலையில் ஐந்து ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் இருப்பதோ இரண்டே இரண்டு ஆசிரியர்கள் தான். இந்த நிலைதான் இந்த வட்டாரத்தின் எல்லாப் பாடசாலைகளிலும். ஆனால் நாட்டிலே தேவைக்கு அதிகமாக ஆசிரியர்கள் இருப்பதாக அரசாங்கம் நாளாந்தம் சொல்லிக் கொள்கிறது என்ன கணக்கோ? என்ன புள்ளி விபரமோ?
இந்த லட்சணத்தில் தன்னைப் போன்றவர்களும் ஐம்பத்தைந்து வயதிலேயே பென்ஷனுக்குப் போய்விட்டால் இந்தக் குழந்தைகளின் கதி?
அவரது கணநேரச் சிந்தனைக்குள் மாணவரிடையே சலசலப்பு.
"சேப்பிரம் அடிக்கிறான் ஐயா."
"சேப்பிரமா? அப்படிச் சொல்லக்கூடாது: சிவப்பிரகாசம்..." என்று திருத்துகிறார் சுந்தரம்.
தந்திச் சேவகன் வேர்த்துக் களைத்துச் சைக்கிளில் வருகிறான்.
அவன் நீட்டிய அட்டையில் கையெழுத்திட்டு அந்த "எக்ஸ்பிரஸ்" கடிதத்தை வாங்கி உடைத்து....
அடியிலே எழுதினவரின் கையெழுத்தைப் பார்க்கிறார்.
பால-சுகுமார்!
அவர் மனம் மீண்டும் எங்கோ தாவுகிறது.
அவர் இங்கு வர முன்னர் படிப்பித்த மகா வித்தியாலயத்தில் அந்த ஆண்டுதான் சர்வகலாசாலைப் புகுமுக வகுப்புகளைத் தொடங்கினார். அவ் வகுப்புகளில் கற்பிக்கப் போதுமான பட்டதாரி ஆசிரியர்கள் இல்லை. ஆனாலும் மாதாமாதம் பணத்தைக் கொட்டிப் பட்டினம் சென்று படிக்க முடியாதவர்களின் வசதி ஒன்றை மட்டும் கருத்திற்கொண்ட வகுப்புக்கள் தொடங்கப்பட்டுவிட்டன.
அவ்வகுப்புக்களில் ஒன்றிற்குத் தமிழ் கற்பிக்க வேண்டிய கடமை "கண்டது கற்றுப் பண்டிதரான" சுந்தரத்தின் தலையில் விடிந்தது!
இரவு இரவாக கம்பனையும், வீரமாமுனிவரையும், மாணிக்கவாசகரையும் கற்று, பலணந்தி€யும் செல்வநாயகத்தையும் படித்துப் பகலிலே தம் மாணவர்களுக்கத் தமிழ் செய்தார் சுந்தரம்.
இரண்டு வருடங்களின் பின்னால் அந்தக் கிராமத்து மாணவர்கள், இந்த வட்டாரத்திற்கே பெருமை பெற்றுத் தந்தவர்களாகச் சர்வகலாசாலையில் காலடி எடுத்து வைத்தார்கள்.
அவர்களில் தமிழை விசேட பாடமாக வரித்துக் கொண்ட அவரது மாணவன்தான் கடிதம் எழுதியிருக்கிறான்! தமிழ் "ஓணர்ஸ்" செய்து முதுமானியாகி, கலாநிதியாகித் தன் பெயரைச் சர்வகலாசாலை மட்டும் நிலை நாட்டுவான் என்று தான் கனவு காணும் அந்தக் கிராமத்து மாணவன்....
சுந்தரம் அவன் கடிதத்தைப் படிக்கிறார்.
அன்புள்ள ஆசானுக்கு.
அந்த விளியை வாசித்ததுமே ஆசிரியர் தம் மனதுள் சிரித்துக் கொள்கிறார். வெளி வேலை ஒன்றும் இல்லாவிட்டால் தன் கிராமத்து மாரியம்மன் கும்பத்துக் குடிசைகளில் உடுக்கடிக்காவது சென்றுவிடும் அந்தத் துடிப்புள்ள மாணவன் தன்னை ஆசான் என்று விளிக்காமல் வேறு எப்படித்தான் விளிப்பான்...?
ஆசிரியர் கடிதத்தைத் தொடர்ந்து படிக்கிறார்.
"ஜப்பான் முதலான கிழக்கு நாடுகளுக்குச் செல்வதற்கு எனக்கு ஸ்கொலர்ஷ’ப் கிடைத்திருக்கிறது. நாளை மறுதினமே கொழும்பிலிருந்து புறப்பட வேண்டும். செய்தி எனக்கு இப்போதுதான் கிடைத்தது. ஆகவே தான் கடுகதித் தபால் எழுதித் தங்கள் ஆசியை விழைகிறேன்."
மெய்சிலிர்த்து ஆனந்தக் கண்ர் விட்டார் சுந்தரம். தன் ஐம்பத்தைந்தாவது வயதிலேயே உபகாரச் சம்பளம் பெறும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டாரோ என்னவோ!
ஆனால் அவரது சிறுமைகள், அவரது வீழ்ச்சிகள், அவரது மளஉளைவுகள், வேதனைகள், எல்லாமே அவரைவிட்டு அந்தக் கணத்திலே அகன்றுவிட அவர் மனம் மட்டும் சேறும் சகதியும் நிறைந்த வயல் வெளிகள் என்ற பசுமைக் காட்சியிடையே கம்பீர்யமாக உயர்ந்து நிற்கும் தம்பலகாமத்துக் கோணேசர் கோயில் விமானம் போல உயர்ந்து புனிதமாய் மிளிர்ந்தது!
நெஞ்சை நிமிர்த்தியபடி காரியாலய அறைக்குள் சென்ற சுந்தரலிங்கம் ஆசிரியர், அலுமாரியைத் திறந்து இலவசப் புகையிரதச் சீட்டுப் புத்தகத்தை எடுத்து, தன் மாணவனுக்கு ஆசிகூறி வழி அனுப்புவதற்காகக் கொழும்புக்குச் செல்வதற்கு "வாரன்ற்" எழுதத் தொடங்கினார்

தோணி
தோணி
கரு நீலமாகப் பரந்து கிடக்கும் வங்காள விரிகுடாவைப் பார்த்தவாறு எங்கள் கிராமம் இருக்கிறது. கிராமம் என்றா சொன்னேன்? பூமி சாத்திர, சமூக சாத்திர நியதிப்படி கிராமம் என்றால் எப்படியிருக்கு மென்று எனக்குத் தெரியாது. சோழகக் காற்றுச் சர சரத்துக் கொண்டிருக்கும் தென்னை மரங்களடியிலே அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏறக்குறைய முப்பது ஓலைக் குடிசைகள் இருக்கின்றன. ஓரு குடிசையிலிருந்து மற்றக் குடிசைக்குப் போகப் பெண்களின் தலைவகிடு போல ஒற்றையடிப் பாதைகள் செல்கின்றன. இந்தக் குடிசைகள் எல்லாவற்றையும் சேர்த்துத்தான் கிராமம் என்று சொல்கிறேன். சரியோ பிழையோ? உங்கள் பாடு.
எங்கள் குடிசைக்கு முன்னால் தென்னைமரங்கள் இரண்டைச் சேர்த்து நீண்ட கம்பு ஒன்று எப்போதும் கட்டப்பட்டிருக்கும். அதிலேதான் தூண்டிற் கயிறுகளையும் தோணியைச் செலுத்த உதவும் சவளையும் என் தந்தையார் வைப்பது வழக்கம். அதன் கீழே தென்னை மரத்தினடியிற் பென்னம் பெரிய குடம் ஒன்று இருக்கும். அந்தக் குடத்திலே தண்ர் எடுப்பதற்காக ஒற்றையடிப்பாதை வழியாக அம்மா அடுத்த குடிசைக்குப் போகும் போதெல்லாம் நானும் கூடப் போயிருக்கிறேன்.
அநேகமாகக் காலை வேளையில் அம்மாவும் அப்பாவும் வீட்டில் இருக்க மாட்டார்கள். அப்பா கோழி கூவும் போதே எழுந்து கடலுக்குப் போய் விடுவார். அம்மாவிற்கு வெளியே என்ன வேலை இருக்குமோ, என்னால் ஊகித்துக் கொள்ள முடியாது. ஆனால், அம்மா வீட்டிற்கு வரும்போதெல்லாம் பனையோலைப் பெட்டியில் அரிசியும், மரவள்ளிக் கிழங்கும், தேங்காயும் கொண்டு வருவதை நான் பார்த்திருக்கிறேன். அம்மா வீட்டுக்கு வந்து சிறிது நேரத்திற்கெல்லாம், அப்பாவும் தூண்டிற்கயிறுகளோடும், சவளோடும் மீன்கோவையோடும் வீட்டுக்கு வந்து விடுவார்.
அப்பாவும் அம்மாவும் வீட்டிலில்லாத நேரங்களில் ஒரே குஷ’தான்! ஏறுவெய்யிலின் மஞ்சட் கிரணங்கள் சரசரக்கும் தென்னோலைக்ட்கூடாகவும் துள்ளிப் பாய்ந்து நிலத்தில் வெள்ளித் துண்டுகளைப்போல வட்ட வட்டமாக ஒளியைச் சிந்தும். அந்த வட்ட ஒளியை நான் என் கையால் மூட, அந்த ஒளி என் புறங்கையில் விழ, அடுத்த கையால் நான் அதை மறைக்க, அவ்வொளி அடுத்த கையிலும் விழ, நான் கைகளை ஒளி விழுமாறு உயர்த்தி உயர்த்திக்கொண்டே போவது எனக்குப் பிடித்தமான விளையாட்டாக இருக்கும். ஆனால் கூரைக்கூடாக ஒளி பாய்ந்துவரும் துவாரம், என்னால் எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறபடியால் நான் என் விளையாட்டை முடித்துக் கொள்வேன்.
குடிசைக்கு வெளியே வந்தால், அங்கே பக்கத்து வீட்டிலிருந்து என் நண்பன் செல்லனும் வந்திருப்பான். செல்லன் என்னைவிட நோஞ்சான். பாய்மரக் கம்புபோல நீளமாக இருப்பான் இன்னமும் ஐந்தாறு வருடம் சென்றால் அவன் தென்னைமரத்து வட்டைத் தொட்டு விடுவான் என்று என் அம்மாகூட அவனைப் பரிகசிப்பது உண்டு.
செல்லன் வந்ததும், நான் எங்கள் வீட்டுப்படலையை இழுத்துச் சாத்திவிட்டு, அவன் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டே ஆற்றங்கரைக்கு ஓடுவேன்.
ஆற்றங்கரை, வீட்டிலிருந்து அதிக தூரத்திலில்லை. வங்காளக் கடல் சிறிது உள்ளே தள்ளிக்கொண்டு வந்து ஒரு சிற்றாறாக எங்கள் கிராமத்திற்கூடாகச் சென்று கொண்டிருந்தது. இந்த ஓடையில் பூரணையன்று வெள்ளம் வரும்போது தண்ர் வீட்டு முற்றத்திற்கே வந்துவிடும்.
அந்த ஆற்றங்கரையின் ஓரமாக, ஆற்றில் நீண்டு வளர்ந்த கோரைப்புற்கள் சடைத்துக் கிடக்கின்றன. அந்தப் புற்களினடியில் நீருக்குள் ஓசைப்படாமல் இருகைகளையும் கூட்டி வைத்து இறால் பிடிப்பதில் எங்கட்குப் பரம திருப்தி; என்றாலும் இந்த விளையாட்டில் எங்கட்கு அலுத்துப் போய்விடும். அதன்பின், நாங்கள் நேரடியாகக் கடற்கரைக்கே போய்விடுவோம்.
கடற்கரையில் கச்சான் காற்று சுழற்றிச் சுழற்றி அடிக்கும் அந்தக் காற்றில் இராவணன் மீசைகளைத் துரத்திப் பிடித்தபின், அந்த விளையாட்டிலும் எங்கட்கு அலுப்பு ஏற்பட்டுவிடும்.
அதன்பின்னால், நாங்கள் இருவரும் கடற்கரை வெண்மணலில் மதாளித்துப் படர்ந்து கிடக்கும் அடம்பன் கொடிகளில்மேல் குந்திக் கொள்வோம். பதைபதைக்கும் வெய்யிலில் அந்த அடம்பன்கொடி மெத்தை எங்களுக்குக் "கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர்தரு" வாகத்தான் இருக்கும். அந்தப்பட்டு மெத்தையின் மேல் வீற்றிருந்து கொண்டு எதிரே கடவுளைப்போல ஆதியும் அந்தமும் அற்றுப் பரந்துகிடக்கும் கருநீலக் கடலிலே அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பாய் விரித்தாடும் பாய்த்தோணிகளைப் பார்த்துக் கொண்டிருப்போம். கடற்பரப்பிலே வெள்ளைச்சீலைப் பாய்கள் வட்ட வட்டமாக, வண்ணாத்திப் பூச்சிகளைப் போல அழகாக இருக்கும். அவைகளில் ஏதோ ஒன்றில் தான் என் தகப்பனார் இருப்பார். ஆனால், எதிலே அவர் இருக்கிறார் என்று திட்டமாக எனக்குத் தெரியாது. எனினும் ஏதாவது ஒரு தோணியைக் குறிப்பிட்டு, அதில்தான் அவர் இருப்பதாக எண்ணிக் கொள்வேன். அந்த நம்பிக்கையில், முகத்தில் 'சுள்' என்றடிக்கும் சூரியக்கிரணங்களை நெற்றிப் பொட்டில் கைகளை விரித்து மறைத்துக்கொண்டு அந்தத் தோணியையே பார்த்துக் கொண்டிருப்பேன். அந்தச் சமாதிநிலையில், என்னுள்ளே இன்பகரமான கனவுகளெல்லாம் எழும். இன்னும் சில நாட்களில் நான் பெரியவனாகி விடுவேன்; அப்போது, அப்பாவிற்குப் போல, எனக்கும் ஒரு தோணி சொந்தமாகக் கிடைத்துவிடும். அந்தத் தோணிக்கு வெள்ளை வேளேரென்று அப்பழுக்கில்லாத ஒரு பாயைப் போட்டுக் கொண்டு நான் கடலிற் செல்வேன்; ஒரு தென்னைமர உயரத்திற்கு எழுந்துவரும் கடல் அலைகளில் என் தோணி தாவித்தாவி ஏறி இறங்கிக்கொண்டே செல்லும். எல்லாத் தோணிகளையும்விட வேகமாக ஓடுவதற்காக என் தோணியின் பாய், பெரியதாக இருக்கம். அந்தப் பாய்க்குள் சோழகக் காற்றுச் சீறியடித்துக் கொண்டிருக்கையில், என் தோணி கடற்பரப்பில் 'விர்'ரென்று பறந்து செல்லும். நான் பின்னணியத்தில் தலைப் பாகைக்கட்டோடு தைரியமாக நின்று சுக்கானைப் பிடித்துக் கொள்வேன்; செல்லன் முன்னணியத்தில் நின்று எனக்குத்திசை காட்டுவான். எங்கள் தோணி முன்னே முன்னே ஏறிச் சென்று, கடைசியாய்க், கடல் வானத்தைத் தொடும் இடத்திற்குப் போய்விடும். அங்கே அம்மா இராத்திரிச் சொன்ன கதையில் வரும் ஏழு தலை நாகத்தைக் காண்பேன்....
தூரத்தே நான் குறித்து வைத்திருந்த தோணி சமீபித்து விட்டது. அதிலே என் தகப்பனார்தான் இருந்தார். தோணி கரையை அடைந்ததும், அவர் பாயைக் கழற்றி வைத்துத் தோணியை ஓடை வழியாக இழுத்துச் சென்றார். நானும் அவரோடு சேர்ந்து கொண்டேன். பிறகு நாங்கள் எங்கள் வீட்டின் முன்னால் தோணியைக் கரையில் கொறகொற என்று இழுத்து வந்தோம். அப்பா தூண்டிற் கயிறுகளை வளையமாக்கி சவளில் போட்டு என்னிடம் கொடுத்தார். தோணிக்குள் இருந்த பழஞ் சோற்றுப் பானையையும், மீன் கோவையையும், நங்கூரத்தையும் எடுத்தத் தோளில் போட்டுக்கொண்டு அப்பா பின்னே வர நான் சவளைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு சப்த சமுத்திரங்களையும் கடந்து வந்த வீரனைப் போல முன்னே நடந்தேன்.
அன்றிரவு முழுவதும் எனக்குத் தூக்கமே வரவில்லை பசித்தவன் விருந்துண்ணத் கனாக் காண்பதுபோல நானும் தோணியைப் பற்றியே கனாக்கண்டேன், எங்கள் வீட்டுக்கு முன்னாலுள்ள ஓடையில் ஐந்து புத்தகம் புதிய தோணிகள் இருந்தன. நான் முன்னணியம் உயர்ந்து சவாரிக் குதிரைபோல இருந்த தோணியின்மேல் ஏறிக்கொண்டேன். வாடைக் காற்றானபடியால் எல்லோருடைய தோணிகளும் முன்னேற முடியாமல் கரையை நோக்கியே வருகின்றன. என்னுடைய தோணி மட்டும் எரிந்துவிழும் நட்சத்திரம் போலக் கனவேகமாகக் காற்றை எதிர்த்துப் போகிறது. கலங்கரை விளக்கின் ஒளிகூடக் கண்ணுக்குப் படாத அத்தனை தூரத்திற்கு ஆழ்கடலின் நடுமையத்திற்கே என் தோணி போய்விடுகிறது....
நான் திடீரென்று விழித்துக்கொண்டேன். காலையில் எழுந்தபோதுகூட எனக்குத் தோணியின் நினைவு மாறவில்லை. அன்று நான் ஓடைக் கரையில் பழுது பார்க்க இழுத்து வைக்கப்பட்டிருக்கும் தோணி ஒன்றைத் தள்ளிக் கொண்டு கடலிற்குப் போவது எனத் தீர்மானித்துக் கொண்டேன். செல்லனைக் கூட்டிக்கொண்டு போய், இருந்த தோணியை எங்கள் பலத்தையெல்லாம் கூட்டித் தள்ளிப் பார்த்தேன். தோணி அசையமாட்டேன் என்றது. அப்படியானால் நான் தோணி விடவே முடியாதா? சப்த சமுத்திரங்களையும் என்னால் தாண்டமுடியாதா?
நான் கவலைப்பட்டுக் கொண்டே யிருக்கையில் ஓடையில் முருக்க மரத்துண்டு ஒன்று மிதந்து வந்தது. அதைக் கண்டதும் எனக்கு ஒரே சந்தோஷமாகப் போயிற்று. ஆம்; எனக்கென்று ஒரு தோணி கிடைத்து விட்டது! அந்த முருக்கங்கட்டையை முன்னாலும் பின்னாலும் 'கொடுவாக் கத்தி'யினால் செதுக்கி உள்ளே குடைந்து தோணி ஒன்றைச் செய்தேன். பின்னர், அந்தத் தோணியில் செல்லனையும் ஏற்றிக்கொண்டு என் ஆசை தீருமட்டும் ஓடையில் தோணிவிட்டு விளையாடினேன்.
மதியம் திரும்பிவிட்டது. என் தந்தை கடலிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார். தோணிவிட்டு விளையாடிக் கொண்டிருந்த என்னைக் கண்டதும், " அடே பயலே! தோணி விடுறியா? அப்படியெண்டா நாளைக்கு என்னோட கடலுக்கு வா" என்றார்.
அதைக் கேட்டதும் எனக்குச் சந்தோஷம் தாங்க முடியாமற் போய்விட்டது. "சரியப்பா, நாளைக்கு நானும் வருகிறேன்" என்று சொல்லிக்கொண்டே சவளைத் தூக்கிக்கொண்டு முன்னால் நடந்தேன். பெரிய தோணியில் போகப் போகிற ஆனந்தத்தில் என் முருக்கந் தோணியை மறந்து விட்டேன்.
2
அன்றிரவு எனக்குத் தூக்கமே வரவில்லை. தென்னோலைச் சரசரப்பும் சில் வண்டுகளின் கீச்சுக் குரலும் எனக்குக் கேட்டுக்கொண்டே யிருந்தன. படுக்கையிற் புரண்டு கொண்டே ஆனந்தக் கனவுகள் கண்டுகொண்டிருந்தேன். கடைசியாய் எங்கோ ஒரு சேவல் கூவிற்று அதைத் தொடர்ந்து எங்கள் கிராமத்துச் சேவல்களெல்லாம் போட்டி போட்டுக்கொண்டு கூவின. அம்மா எழுந்து விளக்கைக் கொளுத்திக்கொண்டு சமயல் செய்யத் தொடங்கினாள்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த குடிசைகளிலிருந்து ஒருவர் மற்றவரைக் கூவியழைக்கும் சப்தம் கேட்டது. கடைசியாய் அப்பாவும் எழுந்து, "தம்பி, டேய்!" என்று என்னை எழுப்பினார். நான் சுட்டபிணம்போல வளைந்து நெளிந்து உட்கார்ந்து கொண்டேன். இரா முழுவதும் தூக்கம் இல்லாததினால் கண்ணிமைகள் கல்லாய்க் கனத்து அழுத்தின. ஆனாலும் உற்சாகத்தோடு எழுந்திருந்தேன். அப்பா சோற்றுப்பானை நிறையத் தண்ரை ஊற்றி எடுத்துக்கொண்டு நங்கூரம், தூண்டில் கயிறு சகிதம் வெளிக் கிளம்பினார். நானும் சவளைத் தோளில் வைத்துக்கொண்டு புறப்பட்டேன்.
படலையைத் திறந்து வெளியே வந்ததும் முகத்தில் வாடைக் கடுவல் ஊசி குத்துவரைப்போலச் சுளீர் சுளீர் என்று அடித்தது. எனக்கு உடம்பெல்லாம் நடுக்கமெடுத்தது. மேல் துண்டை முகத்தை வளைத்துக் கட்டிக்கொண்டு முன்னால் விறுவிறு என்று நடந்தேன். தூரத்தே கடிசைக்குள் இருந்த அகல் விளக்குகள் இருளைக் 'குத்து குத்' தென்று குத்தின.
ஓடைக் கரையை அடைந்தபோது, ஆறு, பரமார்த்த குருவின் சீடர்கள் கண்ட ஆற்றைப்போலத் தூங்கிக் கொண்டிருந்தது. கண்டல் இலைகள் பொட்டுப் பொட்டு என்று விழுந்து ஆற்றில் எங்கே போகிறோம் என்ற பிரக்ஞையே அற்ற வண்ணம் போய்க் கொண்டிருந்தன. கோரைப்புற்களின் மேலே சிலந்தி வலைப்போலப் பனிப்படலம் மொய்த்துக் கிடந்தது.
அப்பா கரையில் இருந்த தோணியை ஓடையிலே தள்ளினார். அதற்குள்ளே சோற்றுப் பானையையும் மற்றைய சாமான்களையும் வைத்தார். உடனே தோணியை ஆற்றிலே விட்டுவிட்டுக் கோரைப் புறகளின் அடியில் 'அத்தாங்கை' வீசி இறால் பிடிக்கத் தொடங்கினார். நான் வெடுவெடுக்கும் குளிரில் வள்ளத்தின் முன்னணியத்தில் ஒடுங்கிப் போய் குந்திக்கொண்டிருந்தேன். கிழக்கே கூரையில் தொங்கும் புலிமுகச் சிலந்தியைப் போல, வானத்தில் விடிவெள்ளி நடுங்கிக் கொண்டிருந்தது. இன்னமும் கீழே கிழக்கு வெளுக்கத் தொடங்கியது.
பறி நிறைய இறால் பிடித்ததும் அப்பா வள்ளத்தில் ஏறிக் கொண்டார். வள்ளமும் சமுத்திரத்தை நோக்கி ஓடத் தொடங்கிற்று. பலாரென்று விடிந்தபோது வள்ளம் நடுச் சமுத்திரத்தையே அடைந்து விட்டது. அப்பா நங்கூரத்தைத் தண்ணிரில் எறிந்து விட்டு தூண்டிலில் இறாலைக் குத்திக் கடலில் எறிந்தார். நானும் தூண்டில் போட்டுக் கொண்டிருந்தேன். சமுத்திரா தேவி நிர்க்கதியான தன் குழந்தைகளைத் தன் அலைக்கரங்களை எறிந்து எறிந்து தாலாட்டிக் கொண்டு இருந்தாள்.
வெய்யில் ஏறிக்கொண்டே வந்தது. முதுகுத்தோலை உரித்துவிடுவதுபோலச் சுளீரென்று அடிக்கும் வெய்யிலுக்கு ஆற்றாமல் அப்பா தன் சட்டையில் கடல் தண்ரை அள்ளி அள்ளி ஊற்றிக்கொண்டே யிருந்தார்.
மதியத்தை அண்மியபோது, நாங்கள் ஆளுக்கு ஐந்து "கருங்கண்ணிப் பாரைகள்" பிடித்துவிட்டோம். என் உழைப்பைக் கண்டு எனக்கே திருப்தி ஏற்பட்டு விட்டது. அந்தத் திருப்தியில் பழஞ் சோற்றைக் கரைத்துக் குடித்த தண்ர் எனக்குத் தேவாமிர்தமாகத்தான் பட்டது. வயிறு நிறைந்ததும், நங்கூரத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்கையில் என் உள்ளம் பகல் கனாக் காணத் தொடங்கியது. "இந்தப் பத்துக் கருங்கண்ணிப் பாரைகளைக் கண்டதும் அம்மா சந்தோஷப்படுவா. பக்கத்துப் பட்டினத்துச் சந்தைக்கு அதைக் கொண்டு போனால் பத்து ரூபாய்க்கு விற்கலாம். சந்தையிலே, எதிரே வரும் பொங்கலுக்காகக் கமுகம் பூப்போன்ற பச்கையரிசியும் பாசிப்பயறும், சர்க்கரையும் முட்டி நிறையப் பாலும் வாங்கிக் கொள்ளலாம். 'எங்கள்' வீட்டுத் தென்னை மரத்தின் கீழே புதுப் பானை 'களக் களக்' என்று பொங்கும் போது நான் புது வேட்டியை எடுத்துக் கரும்பைக் கடித்துக்கொண்டு....
வள்ளம் கரையை அண்மிட்டது. கடற்கரையிலே புத்தம் புதிய பைசிக்கிளிற் சாய்ந்தவாறு ஒருவர் நின்று கொண்டிருந்தார். சூரிய கிரணங்கள் வைசிக்கிள் தகடுகளின் மேல்பட்டு ஜொலித்தன. அப்பா ஏதோ மந்திர சக்தியால் கட்டுண்டவரைப்போலத் தோணியை அங்கே திருப்பினார்.
தோணி கரையை அடைந்ததும் மீன்களையெல்லாம் பைசிக்கிள் காரரிடம் போட்டுவிட்டுத் திரும்பவும், வீட்டை நோக்கித் தோணியை விட்டார்.
எனக்கு ஏமாற்றமாக இருந்தது.
தோணி வந்துகொண்டிருக்கையில் நான் கேட்டேன்: "ஏன் அப்பா மீன்களை எல்லாம் அங்கே போட்டுவிட்டு வருகிறீர்கள்?"
அப்பா சொன்னார்: "அவர்தான் நம் முதலாளி, இந்தத் தோணி-எல்லாம் அவருடையதுதான். நாம் மீனைப் பிடித்து அவருக்குத்தான் கொடுக்க வேண்டும்."
"நமக்குக் காசு தரமாட்டாரா?"
"நம் கடனிலே கழித்துக் கொள்வார் விலையை. நமக்குச் சாப்பாட்டிற்காக மேலும் கடன் தருவார்."
"அப்படியானால் நாம் ஒரே கடன்காரராகத்தானே இருக்க வேண்டும்?
"என்னமோ அப்பா; நானும் தலை நரைக்கு மட்டும் உழைத்து விட்டேன். கடனை இறுக்க முடியவில்லை. நமக்கென்று புதிதாக ஒரு தோணி வாங்கவும் முடியாது."
"எல்லாத் தோணிகளும அந்த முதலாளியுடையது தானா அப்பா?"
"ஆம், ஓடைக்கரையிலே இழுத்து வைக்கப்பட்டிருக்கும் எல்லாமே அவருடைய தோணிகள்தான்."
வெள்ளம் ஓடைக்கரையை அடைந்து விட்டது. நாங்கள் தோணியைக் கரையில் இழுத்து வைத்துவிட்டு வீட்டை நோக்கி நடந்தோம். என்னுள்ளே ஒரு பயங்கரமான உண்மை புலனாகியது. இந்தத் தோணி எனக்குச் சொந்தமில்லை. ஆம், தூண்டிற்காரனுக்குத் தோணி சொந்தமில்லை; அப்படியே உழுபவனுக்கு நிலம் சொந்தமில்லை; உலகில் உழைப்பவனுக்கு எதுவும் சொந்தமில்லை.
அன்றிலிருந்து தோணி எனக்குக் கனவுப் பொருள் ஆகிவிட்டது. எப்படியாவது கஷ்டப்பட்டு உழைத்து ஆகக் குறைந்தது ஒரு தோணியாவது சொந்தமாக வாங்கிக்கொள்ள வேண்டும். அதன்பின் மீன் பிடித்தால் சந்தையில் கொண்டுபோய் நம் இஷ்டத்திற்க விற்கலாம். பொங்கலுக்குக் கரும்பும், பாலும், பச்சையரிசியும் சர்க்கரையும் வாங்கலாம்... முதலாளிக்குப் பிடித்த மீனையெல்லாம் கொடுத்துவிட்டு வெறுங்கையோடு திரும்பிவரத் தேவையில்லை.
* * *
நாட்கள் கடந்துவிட்டன. நான் பெரியவனாகிவிட்டேன். சொந்தத் தோணி இன்னமும் வெறுங்கனவாகவே இருந்து வந்தது. தகப்பனார் வாழ்ந்துவரும் அதே பாதையிற்றான் என் வாழ்வும் போய்க்கொண்டிருந்தது. இந்த வாழ்வில், எனக்கு நேரகாலத்தில் கல்யாணம் முடித்து வைத்துவிடவேண்டும் என்பதை அம்மாவின் ஆசை.
ஒருநாட் சாயந்திரம் ஓடைக்கரையில் இராட்டினத்தில் நூல் முறுக்கிக்கொண்டிருந்தேன். மேலே நீல நிறமான ஆகாயம் ஓடையின் தெளிந்த தண்ரிலும் விழுந்து பிரதிபலித்துக் கொண்டிருந்தது. ஒடை முகத்துவாரத்தில் இருந்த மணல் தீவில் கடற்புட்கள் கூட்டம் கூட்டமாக வந்து விழுந்து கொண்டிருந்தன.
"தண்ர் எடுத்துக்கொண்டு வருகிறேன்" என்று வீட்டுக்குப் போன அம்மாவை இன்னமும் காணவில்லை. எனக்குத் தாகமாயிருந்தது. வீட்டுப் பக்கம் திரும்பிப்பார்த்தேன். கனகம் செம்பிலே தண்ர் எடுத்துக் கொண்டு வந்தாள்.
கனகம் எங்கள கிராமத்துப் பெண்தான். நீரின் இடைமட்டத்தில் ஆடும் பாசிக்கொடியைப்போல எப்போதும் மென்மையாக ஆடிக்கொண்டுதான் அவன் நடப்பாள். கற்பாரில் நிற்கும் செம்மீவனப போலச் செக்கச் செவேலென்று அழகாக இருப்பாள். வண்டலிலே மின்னும் கிளிஞ்சல்போல் இருக்கும் அவள் கண்களை இன்றைக்கு முழுவதுமே பார்த்துக் கொண்டிருக்கலாம்.
அவள் அருகால் வந்தபோது, "கொஞ்சம் தண்ணி தந்திட்டுப் போறியா?" என்று கேட்டேன் நான்.
கனகம் ஒன்றும் பேசாமல் என்னிடம் செம்பை நீட்டினாள்.
நான் தண்ரைக் குடித்துக் கொண்டிருக்கும்போது, அம்மாவும் தண்ர் எடுத்துக்கொண்டு வந்து விட்டாள். அம்மாவைக் கண்டதும், கனகம் ஏதோ செய்யத்தகாத காரியத்தைச் செய்தவள்போல வெட்கப்பட்டுக் கொண்டு போய்விட்டாள்.
அம்மா சொன்னாள்: "என்ன வெட்கமாம் அவளுக்கு. நாளைக்கு அவளைத்தானே நீ கல்யாணம் முடிக்கப் போகிறாய்?"
"போ அம்மா, எனக்கென்று ஒரு தோணி இல்லாமல் எனக்குக் கல்யாணமே வேண்டாம்" என்றேன் நான்.
"ஏண்டா! அவள் அப்பாவிடம் ஒரு தோணி சொந்தமாக இருக்கிறது. அதை உனக்கே கொடுத்து விடுவார் அவர்" என்றாள் அம்மா.
நான் யோசித்தேன். எனக்குக் கல்யாணத்திலோ கனகத்திடமோ அக்கறை இல்லாவிட்டாலும் தோணி கிடைக்கப் போகிறதே! தோணி மட்டும் கிடைத்து விட்டால் என் உழைப்பீன் பயனை நானே அனுபவிக்க முடியும். என் குடும்ப வாழ்வும் இன்பமாகவே இருக்கும்...
அதன் பிறகெல்லாம் நான் கனகத்துடன் தைரியமாக நெருங்கியே பழகினேன். மனோகரமான மாலை வேளைகளில், ஓடைக்கரையில் இழுத்து வைக்கப்பட்டிருக்கும் தோணி மூலையில் குந்திக்கொண்டு நானும் கனகமும் எவ்வளவோ கதைத்திருக்கிறோம்! கனகம் எப்பொழுதுமே தன் தோணியைப்பற்றிப் பெருமைப் பட்டுக்கொள்வாள். அந்தத் தோணி அவள் தகப்பனாரின் சொந்தமாக இருக்கிறபடியாற்றான் கனகம் நல்ல சேலை கட்டியிருக்கிறாளாம். கையில் தங்கக் காப்புப் போட்டிருக்கிறாளாம்! 'அவள் என்றைக்குமே அப்படி இருக்க வேண்டும்' என்று என் மனதுள் எண்ணிக் கொள்வேன்.
ஆனால், இரண்டு வாரத்துள் அந்தத் துக்ககரமான செய்தி கிடைத்தது. கிராமமே பரபரப்படைந்தது. கனகத்தின் தந்தை மீன் பிடிக்கப் போனவர் புயலின் அகப்பட்டு மாண்டு போனார். தோணியும் திரும்பி வரவில்லை.....
என் இருதயத்தில் சம்மட்டியடி விழுந்ததுபோன்றிருந்தது எனக்கு. பாவம்! எனக்குத்தான் சொந்தத் தோணி இல்லையென்றாற் கனகத்திற்குக்கூடவா இல்லாமற் போகவேண்டும்?
இரண்டு மூன்று நாட்கள் கழித்துக் கனகம் கடற்கரைக்கு வந்தபோது அவளை நிமிர்ந்து பார்க்கவே என்னால் முடியவில்லை. அவன் கண்கள் கலங்கியிருந்தன. என்னைக் கண்டதும் அழுகை பொத்துக்கொண்டு வந்துவிட்டது அவளுக்கு. விம்மி விம்மி அழத் தொடங்கினாள். என் மடியிற் தலையைப் புதைத்துக்கொண்டு. கனகம் என்னிடம் எதை எதிர்பார்த்தாள?
கனகத்தை மடியில் வைத்துக்கொண்டே நான் எண்ணினேன். என்னிடமோ தோணி கிடையாது. இந்த நிலையில் அவளை நான் சுகமாக வாழ்விக்க முடியாது.
என் தகப்பனாரப்போல நானும் தலை நரைக்கும் வரை உழைத்து, உழைத்துச் சாகவேண்டியதுதான். என்னோடு சேர்ந்து கனகமும் ஏன் சாகவேண்டும்? பாவம் கனகம்...
எனவே கனகத்தை யாராவது சொந்தத் தோணியுள்ள ஒருவனுக்குக் கல்யாணம் செய்து கொடுத்துவிட வேண்டும். என் கண் முன்னால் அவள் அழகான சேலையும், தங்கக் காப்பும் அணிந்துகொண்டு என்றென்றைக்கும் ஆனந்தமாக வாழவேண்டும். அவள் வாழ்வுதான் எனக்கும் ஆனந்தம்...
நான் எண்ணியது சரியாகப் போய்விட்டது. அமாவாசையன்றிரவு, புங்கை மரத்தின்கீழே இருந்த வைரவர் கோவிலடியில் கனகத்துக்கும் செல்லனுக்கும் கல்யாணம் நடந்தது. கல்யாணத்தன்று பேசிப் பார்க்கவோ எனக்குக் கண்ர் வந்துவிட்டது. என் கையில் இருந்த அரும்பொருள் இன்னொருவனுக்குப் போய் விட்டது... ஆனாலும், என் கண் முன்னால் அவள் ஆனந்தமாகவே வாழ்வாள். செல்லனிடம் ஒரு தோணி இருக்கிறது. அவன் என்னைப் போலக் கடன்காரனல்ல, செல்லனோடு கனகம் என்றென்றைக்கும் ஆனந்தமாக வாழட்டும். எனக்கென்று தோணி ஒன்று கிடையாமல் நான் எந்தப் பெண்ணின் வாழ்வையும் பாழாக்கப் போவதில்லை...
ஆனால், இன்னமும் தோணி எனக்குக் கனவுப் பொருளாகத்தான் இருக்கின்றது. அதனாலென்ன? உயர்ந்த கனவு செயல்மிக்க நனவின் ஆரம்பந்தான், எப்போதாவது ஒரு நாளைக்குக் காலம் மாறத்தான் போகிறது. அன்றைக்கு எனக்கு மட்டுமல்ல, என் நண்பர்கள் எல்லாருக்குமே சொந்தத் தோணி இருக்கும். எங்கள் தோணிகள் சப்த சமுத்திரங்களிலும் சுதந்திரமாகச் சென்று மீன் பிடிக்கும். அந்த மீன்களை விற்றுச் சந்தையில் அரிசி வாங்குவோம். அரிசி வாங்கும் பணமும் என்னைப்போன்ற உழைப்பாளியான ஒருவனுக்கு நேரடியாகக் கிடைக்கும்! அப்போது உழவனுக்கு நிலமும் சொந்தமாக இருக்கும் அல்லவா?

Subscribe to:
Posts (Atom)