Saturday, 4 December 2010

சம்புகளி பத்தினி மீதான ஊஞ்சல் .காளியப்பு விஜயசிங்கம்

சம்புக்களியுறை பத்தினி தாயாரே
சரணம் சரணம் அம்மா
வம்பர்கள் நாம் செய்யும் பிழகளை பொறுத்தருள்
 வாழ்வினைத் தாருமம்மா
 காவிரிதன்னிலே பிறந்திட்ட தாயாரே
கழனிகள் கடந்து வந்து
பூவிரி சோலையாம் சம்புகளியிலே
புகுந்திட்டாய் தாழ் போற்றி

மாதவி தன்னோடு மகிழ்ந்திடச் சென்றிட்ட
கோவலன் தனை மீட்டாய்
குவலயம் மீதிலே குணமமென வாழ்ந்திட்டாய்
 க்கும்பிட்டு பணிகின்றோம்
 தாமரை அழகுற அல்லியும் மலர்கின்ற
சம்புகுளம் வந்தாய்
பூமலர் சொரிகின்ற சோலையாம் மண்ணிலே
புதுமகள் செய்கின்றாய்

தேமாங்கனியோடு தென்னம் பழமும்
சேர்ந்தே சொரிகின்ற
பூமார்ந்த சோலையாம் சம்புக்களியிலே
புகழூர்ந்த தாயாரே
எங்கள் பரம்பரை எழிலோடு வாழ்ந்திட
என்னாளும் காப்பபவளே
கா விரி சோலையாம் சம்புக்களியிலே
காவலம் நீ தாயே

குயிலினம் பாடிட மயிலினம் ஆடிடும்
கொஞ்சு மலர்ச் சோலை
புளினம் கீச்சிட புகலிடம் தேடிடும்
தங்க மலர்ச் சோலை
மீகாமப் பரம்பரை   மேலும் செழித்திட
மிகுந்த வரம் தந்தாய்
சம்புக்களியுறை பத்தினி தாயாரே
ஆடிர் ஊஞ்சலே

No comments:

Post a Comment