Monday, 6 December 2010

மானமுள்ள தமிழன் மாண்பல்ல:



பதவிக்காக பல்டியடிப்பதும்
பணத்திற்காக பண்பையிழப்பதும் - இனப்
பற்றுள்ள தமிழன் பண்பல்ல!


சண்டித்தனத்திற்கு சரணடைவதும், தன்
சுயநலத்திற்காய் சோரம் போவதும்
மானமுள்ள தமிழன் பண்பல்ல!

உரிமையை உதறி உண்மையை விழுங்கி
பொய்மையாய் வாழ்வதும் - தொடர்ந்து
நரித்தனம் புரிவதும் நம்மொழி நம்மினம்
நலிவுற துணை போவதும்
செம்மொழி மாந்தர் சிறப்பல்ல!

தாய்மண் மீது பற்றற்று வாழ்வதும்
தாய் தந்தையரைப் பேணாதிருப்பதும்

சிறந்த தமிழனின் பண்பல்ல!

குட்டக்குட்ட குனிந்து கொடுப்பதும்
கொள்கையை விட்டு சோரம்போவதும்
எட்டப்பனைப் போல் வாழ்வதும்
இன்பத் தமிழ்மகன் மாண்பல்ல!

கவிக்குயிலன்
அ. அரசரெத்தினம்
சேனையூர் -06
மூதூர்

No comments:

Post a Comment