உழைப்பை கடினமாக்கி உயரவேண்டுமெனும் திடத்துடன்
உள்ளோரெல்லாம் ஒன்று சேர்ந்து
உதவிக்கு சங்கங்களை உருவாக்கி
உல்லாச வாழ்விலாவிடினும் உணவுண்ண வழிசமைத்து
உண்மை வாழ்வு வாழ்கையில்
ஊரில் எங்கிருந்து வந்ததோ “வடி” எனும் கொடிய வாழ்வழிப்பி
ஊடறுத்துப் பாயும் அம்பு போல் ஊரெல்லாம் துண்டாடிய விந்தை
உலை வைக்கும் இல்லாள் துயரம் சுமந்து
உறக்கமின்றி குந்திற்கு பாரமான நிலையில்
உட்கார்ந்து சிந்தித்த வேளையில்
உணர்விழந்த நிலையில் தன் கணவன்
உயிரே போகுமளவில் அழுகுரல்
உணவில்லா உடல் அதுவும் உணர்விழக்க
உடன்பிறப்புக்கள் செய்வதறியா மருத்துவமனை கொண்டு செல்ல
உணர்வுபெற்ற மறுநாள் தொடர்கதை தொடர்ந்த கதைதான்
உள்ளே சென்றதன் வீரியம்
உசுப்பி விட்ட தைரியத்தில்; வீடு சென்று
உண்மைக்குப் புறம்பான சந்தேகம் பல தெரிவித்த வேளை
உதிரம் கொதிக்க பறந்த பல வார்த்தைகளின்
உண்மை புரிய “வடி”க்கேது அறிவு – அவ்வேளை
உதவா மந்தி கைக் கிடைத்த தூக்கணாங் குருவிக் கூடாகி
உயிர் துறந்து ஊரே கூடி நல்லடக்கம் செய்து ஊர் மீண்ட வேளை - நல்
உள்ளங்கள் ஒவ்வொன்றும் சிந்தித்தன
“ஏன் இவர்களெல்லாம் 2006 இல் தப்பிப்பிழைத்தார்கள்?”
க.திருச்செல்வம்
கட்டைபறிச்சான்
No comments:
Post a Comment