தொலைந்த காலம்
இந்த மண்ணில் எங்கள்வாழ்க்கை
இலையுதிர் காலத்து
மொட்டை மரங்களாய்
கனவுகள் கற்பனைகள்
ஆசைகள் எல்லாம் நிராசைகளாகி
நீண்ட பயணத்தில்
மொத்தமும் தொலைந்து
ஏக்கப்பெருமூச்சே எமது சொந்தமாய்
எதிர்காலம் கேள்விக் குறியாய்
சுதந்திரக்காற்றை சுவாசிக்கின்ற
சோகப்பயணம் தொடர் கதையானது
களைத்துச் சோர்ந்து
நிலத்தில்வீழ்ந்த உழகை;கும்
வர்க்கத் தமிழர்கள் நாங்கள்
பாலைவனத்தில் நீரைத்தேடும்
பாவிகனானோம்
விடியா இரவும் முடியா இருளும்
மறையா வறுமையும்
மறையாத்துயரும் ஒழியும்
ஒரு நாள் வருமா
அது ஒளியைத் தேடித்தருமா
தாய் நிலத்தின் நினைவுகள்
சேனையூர்
தௌ;ளுதமிழ்ச் சொல்
உச்சரிக்கும் போதே
உவகை உச்சிவரை மூட்டும்
முன்னோர்கள்
எம் முன்னோர்க்கும்
முன்னோர்கள் வாழ்ந்து வந்த
எங்கள் வளம் கொளிக்கும் கிராமம்
ஏழைகட்கு வாழ்வளிக்கும்
மீன் வளத்தை தான் சுமந்து
உப்பு நீர் கடலிருந்து உட்புகுந்து
வளைந்து நெளிந்து
முப்புறமும் சூழ்ந்து
எப்பொழுதும் அரணாக
இயற்கை தந்த கொடை
பழந்தமிழ் மணம் வீச
பண்பாடு காத்து பண்போடு
கலாசாரப் பெருமை காத்து
முத்தமிழ் கலை வளர்த்து
புத்தெழுச்சியோடு உத்வேகம்கொண்ட
உயிர்த் துடிப்புள்ள கிராமம்
காடும் மேடும் திருத்தி
களனிகளாய்ச் செப்பனிட்டு
வாழ்வளித்த உழவர் நாழும்
வலம் வந்த மண்
இன்று நார்நாராய் கிழிபட்டு
வேரோடு சாய்ந்த மரமாய்
மரணப்படுக்கையில் மண் மகள்
ஓடி வருகிறோம் வாரியணைக்கிறோம்
கண்ணீரை இறைத்துக் களைத்து
எம் சென்னீரை வியர்வையாக்கி
சிறுகச் சிறுக மெருகூட்டுகிறோம்
கொடிய வலி
புத்தம் அகிம்சை
போர்வையை விலக்கி
யுத்தம் தொடங்கியது
கண்ணீரும் சென்னீரும்
கலந்த மாவிலனாறு
கடலோடு கலந்தது
மாதங்கள் மறைய
கார்காலம் தெரிய
ஆனைக்கண் குளம்
கனத்த தன் வயிறு நிரப்பி
பானைக்குள் சோறாய்
அகப்பை போட ஆளின்றி
ஆகாயம் பார்த்தது
அருகே நாற்புறமும்
விரிந்த நன்செய் நிலங்கள்
நாவறண்டு கிடந்தது
தண்ணீரைப் பருகி
சகதியாய் குளித்து
பச்சைப் புத்தாடையுடுத்தி
சென்நெல்லாய்
சிரிக்க வேண்டிய
பொன்விளையும் பூமி
தன்மேனி தரிசாக மனம்
புண்ணாகித் தவிக்கிறது
ஏர் பிடித்து உழுது
இரண்டு முறை சேறடித்து
சார்கட்டி நெல்விதைத்து
வியர்வை போக்க சால்வையால்
முகம்துடைத்து
வாய்க்காலின் ஓரம்
ஆத்திமரத்தடியில் அன்னம்மா
கட்டிவைத்த சாதம்பிசைந்துண்ட
நாள் நினைத்து சாமித்தம்பி அண்ணன்
கண்ணோரம் நீர் கசிகிறது
குழந்தையின் ஊர்க்கனவு
அஞ்சுவயது பிஞ்சுக்குழந்தை
நெஞ்சம் நிறைந்த தன் ஆசையால்
கொஞ்சு தமிழிலில் குரலெடுத்து
கேட்கிறான் அம்மா நாம் எப்போது
சம்பூர் செல்வோம் என்று
ஏக்கமாய் பார்த்து இதழோரம் புன்னகைத்து
விழியோரம் நீர் கசிய
தன்னன்புச் செல்வத்தை வாரியணைத்து
உச்சி தடவி கண்ணீரால் குளிப்பாட்டி
அன்னை சொல்கிறாள்
சொந்த ஊரே நமக்குச் சொர்க்கம்
கிடைத்துவிடும் சொர்க்கம்
பொறுத்திடடி என் மகனே
கு. நாகேஸ்வரன்
சம்பூர்