காலயும் மாலையும் மகாவலி
காயாமல் கரைபுரண்டோட
கட்டபறிச்சானோடு சேனையூரும் - நல்ல
கடற்கரைச்சேனையும் மீன் பாட்டுப் பாட
சாலை நீண்ட இருமருங்கிலும்
சாணிவண்டுகள் சாணியுருட்ட அதை தாண்டியே
சம்பூர் செல்லும் பாதைகளெல்லாம்
சாமந்திப்பூக்களும் செல்லப் பிராணிகளும்
சாயாத கோயிலும் வரவேற்க
என்ன இல்லை எங்கள் கொட்டியாரப்பற்றில்
எத்தனை மக்கள் எத்தனை இனிமை
என்ன உணவு எத்தனை கலைகள் அவ்வளவாம்…..
என்ன சொல்லித்தீருமோ அந்த நினைவை
வெளிச்ச வீட்டு வெள்ளயன் முதல்
வெள்ளை மனசி படைத்த எம்மக்கள்
வெள்ளைக் கொக்கான எம்மவரையும்
வெள்ள இன்பமாய் வரவேற்றனர்
இப்படி இருந்ததது அன்றெங்கள் ஊர்கள்
பின் காலை இல்லை நீண்ட சாலை இல்லை
சம்பூர் இல்லை எத்தனை மக்கள் இல்லை
வெளிச்ச வீட்டில் வெளிச்சம் இல்லை
வெள்ளை கொக்கு மட்டும் உண்டு அங்கு
கால தேவன் கண் கசக்க
கண்ட இடமெல்லாம் இருண்டு கிடக்க
காண் என்று கலகலவென சிரிப்பொலி கேக்க
ஆந்தைகள் மட்டுமே குடியிருக்க
யாருமில்லாப் பெரிய இருளில்
விறைத்துக் கிடக்குது தாய் நிலம்
சு. ராஜஆனந்
சம்பூர்
No comments:
Post a Comment