தாய் மண்ணே
பெற்றெடுத்த தாய் மண்ணே
பிரியமுடன் என்னை
தொட்டிலிட்டு தாலாட்டி
துயில் வளர்துக்காத்திட்ட
கொட்டியாரத்தமிழ் மண்ணே
கருவில் உயிரூட்டி
கருத்தில் உணர்வூட்டி
பெருமையுடை இன்தமிழை
பேசவைத்த அருமை மிகு
தாய் மண்ணே
அன்னைத் தமிழ் மண்ணே
தொன்று தொட்டு தொல்தழிழர்
வாழ்வதற்கு உறைவிடமாய் அவர்
பொருள் வளத்தைப் பெருக்கிவைத்த
பெரு நிலமாய்
உணவளிக்கும் வயல் நிலமும்
உயிர் கொடுக்கும் நன்நீரும்
கடல் வளமும் கொண்டு
எமைக் காத்திட்ட தாய் மண்ணே
காடும் காணிகளும் மேடும்
பல நூறு வாவிகளும்
மேவி நின்ற மேனி கொண்டு
எம்மை மேன்மையுறச் செய்த
தாய் மண்ணே தமிழ் மண்ணே
உனை அள்ளி முத்தமிட
நினைக்கின்றேன்
செத்து விடும் நாள் வரினும்
சிறிதேனும் உன் சிற்றடியில்
சிரம் சாய்க்க சித்தம் கொண்டேன்
கு. நாகேஸ்வரன்
சம்பூர்
No comments:
Post a Comment