சமாதானம் வந்தும் - எமக்கு
சுந்தோசம் பிறக்கவில்லை
எப்போது தீருமோ
எங்களின் அகதி நிலை
குடிகள் பல உண்டு - எம்மை
குடியேற்ற யாருமில்லை
ஊட்டி வளர்த்த அன்னையாம்
ஊருக்கு வழியில்லை
நலம்புரி முகாமதில் நாம்
நலமாகத்தான் இருக்கின்றோம்
சொந்த இடம் கிடைக்கும் என்று
சொல்லிக்கெண்டிருக்கிறோம்
மீட்டிப் பார்க்கிறோம் - எம் ஊரை
மீண்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்
உவகை பொங்குகிறது - எமக்கு
உள்ளம் நெகிழ்கிறது
அன்பான மக்கள் - என்றும்
அரவணைக்கும் பண்பினர்
வந்தாரை வாழவைத்து – எம்மை
வளிப்படுத்தும் ஊர்
கலைஞர் நிறைந்து நின்று
கலைகள் பல தந்திட்ட எம்மூர்
பத்திர காளியாம் எம்தாய்
பத்திரமாய் காத்திட்டாள் எம்மை
திருவிழா என்றால் எல்லோரும்
திரண்டிடுவர் கோயிலுக்கு
அனைவருக்கும் ஆசிதந்து
அருள்பாலித்திட்டாள் அம்பிகை
கல்விக் கூடங்கள் இரண்டுமே
கரையில்லா கல்விதனை தந்தது
ஒவ்வரு வருடமும் மாணவர்
ஒழுங்காக செல்லுவர் பல்கலைக்கழகத்திற்கு
பச்சைப் பசேல் என பளிச்சென்று
காட்சி; தரும் வயல் வெளிகள்
வில்லுக் குளத்தினில் வெண்டாமரை
விண்ணைப்பார்த்து சிரித்திடுமே
கற்றவர் பலவுண்டு எம்மூரில்
கற்பனை வளத்துடன் மின்னிட்டார் பாரில்
நாளொரு வளர்ச்சி கண்டது
நாமெல்லாம வாழ வழி தந்தது
நடைமுறை வாழ்க்கையை
நாடகமாய் நடிப்பர் நம்மவர்
கோயிலில்லா ஊரில்
குடியிருக்க வேண்டாம் என்றனர் ஆனால்
கோயிலுக்கு பஞ்சமில்லை எம்மூரில்
நிறுத்துக்pறோம் எம்மூரின்
நினைவலைகள் தொடர்வதை
காலம் வரும் என்று
காத்திருக்கிறோம் நாங்கள்
ஊருக்கு செல்வதற்கு
ஊக்கமாய் இருக்கிறோம்
ஆன்பாய் அரவணைத்து
ஆழைத்துச்செல்ல யாருமில்லை
வயல் வெளிகளும் ஏங்கி நிற்கும்
வதிவிடமும் காத்திருக்கும்
மக்கள்அனைவரையும்
மகிழ்ச்சியுடன் வரவேற்க
காத்திருப்போம் நாம்
காலமெல்லாம ஊர் கிடைக்கும் என்று
திருமதி . சுஜந்தனிதேவி யுவராஜா
சம்பூர்
No comments:
Post a Comment