வீசுகர மேகநிற வேதநுதலாள் கருணை
மேவுமத வாரண வினாயக வினோதா
சேசுருதி மேருவினிற் பாரதமிழ் கோடுகொடு
சேமமுறவே எழுது சேர்கருணையோனே
கூசுமதி சேர்நுதலி கோமளவலிக்கோர்
கொஞ்சுமழலைக் குஞ்சர முகத்தோய்
பேசுதமிழின் கதைகளே பாடுதற்குஉறு
பிழைகள் வாராமல் அருள் பேழைவயிறோனே
சீர்பொருந்தும் ஐங்கரனே திருமாலின் மருகோனே
கார்பொருந்தும் ஆனைமுக கணபதியே கற்பகமே
பார்பொருந்தும் கணகையார் பழிவாங்கி குளிர்ந்த கதை
ஊர் செழிக்க பாடுகிறேண் ஒருபிழையும் வாராமல்
ஒருபிழையும் செய்யாத உலகு புகழ் கோவலரைப்
பெருமழுவாற் கொல்லுவித்த பிழைமாறன் தனவதைத்து
கருதரிய ஆயர் மனை கனல் மீள சாபமிட்டு
இருமுலையும் குளிர்ந்தகதை யானுரைக்க காப்பாமே

No comments:
Post a Comment