எனக்கும் கொஞ்சம் அவகாசம் கொடு ............
என் அழுகைகளை
கொஞ்சம் அமிழ்த்திவைக்கிறேன்
எனக்குள் இருக்கும் அவள்
அழிந்து போகாதபடிக்கு ..........
என் காதல் .....
என் காமம் .....
கடந்து போவதற்குள்
அச்சாகுமா என் கவிதை ?
கணணி முத்தத்திலும்
காகித முத்தத்திலும்
எனக்கு உடன்பாடில்லை .......
சேமித்து வைத்திருக்கிறேன் ...
அளப்போகிறாய் சுமக்கமுடியாமல் .....
தலைக்குமேல்
விமானங்கள் பறக்கும்போது
நினைவுவரும் ......
உன் கடைசி கண்ணீர்த்துளியும் - என்
தலைவிதி மாறிப்போன விதியும் .
அதிகமாய் அழுதுவிடாதே ,
ஆனந்த கண்ணீருக்கும்
கொஞ்சம் சேமித்துக்கொள் ....
அதிகமாய் உருகிவிடதே ,
அணைக்கும் அளவிலாவது
நிறுத்திக்கொள் .......
அதிகமாய் நினைத்துக்கொள்ளாதே
நான் உண்ணும்போதவது
இடைவேளைவிடு ,,,,,,
அதிகமாய் என்னை நேசிக்காதே
எனக்கும் கொஞ்சம்
அவகாசம் கொடு ...........
அகிலன் குருஸ்
No comments:
Post a Comment