Wednesday, 10 November 2010

நீ எனக்கு உயிரடி.....


நீ எனக்கு உயிரடி....


உனக்காய் நானும் எனக்காய்
நீயும் அழுது பொழுது நீளுதடி -நம்
உண்மை காதல் வாழுதடி..

இவர்கள்
அறியாத காதலின் அன்பும் ,வலியும்
எப்படித்தான் புரியும் ..!!
எப்போதுதான் புரியும்..!!!?

வேண்டுமென்றால் வாங்கவும்
இல்லையென்றால் தவிர்க்கவும்
மளிகை கடை பொருளா காதல்??

உன் நிழலையும் நேசிக்கும் எனக்கு
இவர்கள் தரும் பதில்கள்தான் என்ன!!
" விட்டுவிடு" என்பதா!!???

மன்னித்து விடு என்னை
மரணித்து விடுகிறேன்........!

கொளுத்தும் வெயிலை
குடையால் தடுக்கின்றனர் - என்னில்
குடிவந்து விட்ட உன்னை
எதை கொண்டு தடுப்பார்??

கடந்த இரவின் கனவிலும்
விடிந்த பொழுதின் என் நினைவிலும்
கலந்துவிட்ட - உன்னை
எதை கொண்டடி பிரிப்பர்...!!!

நீ எனக்கு உயிரடி....நீ எனக்கு உயிரடி...

  •   அ .வின்சன் றோய்
    மூதூர்


    எதுவுமே வேண்டாம்...


    வறுமை இருந்தால் பிறப்பும் வேண்டாம்...
    அழிவு இருந்தால் ஆக்கமும் வேண்டாம்..
    சுகம் இல்லையேல் சொர்கமும் வேண்டாம்..
    தாய் இல்லையேல் சொந்தமும் வேண்டாம்..
    காதலி இல்லையேல் கனவும் வேண்டாம்..
    கடவுள் இல்லையேல் கோயிலும் வேண்டாம்..
    சுதந்திரம் இல்லையேல் சொந்த நாடும் வேண்டாம்..




    தை பிறக்கட்டும்..


    தை பிறக்கட்டும் - நமக்கு
    வழியும் பிறக்கட்டும்..

    போராட்ட புவி தனில்
    அமைதி பொங்கட்டும்...

    மனித மனங்களில்
    மனிதம் பொங்கட்டும்..

    ஏழைகள் காணின்
    தர்மம் பொங்கட்டும்..

    வீழ்ச்சி கண்டவனுக்கு
    எழுச்சி பொங்கட்டும்..

    முடியாதென்றவனுக்கு
    முயற்சி பொங்கட்டும்..

    மாணவ மணிகளுக்கு - நல்
    கல்வி பொங்கட்டும்..

    திறமையுள்ளவனுக்கு
    வாய்ப்புக்கள் பொங்கட்டும்...

    தலைமைகளுக்கு
    பொறுப்புக்கள் பொங்கட்டும்..

    நல் இனிய நாட்டிற்கு
    வளங்கள் பொங்கட்டும்..

    "நான்" அழிந்து "நீ" அழிந்து
    "நாம்"
    என்ற ஒற்றுமை பொங்கட்டும்..

    *** தை பிறந்தால் வழி பிறக்கும் 



    ஒரு பட்டாம் பூச்சியின்..



    புயல் அடிக்கும் வேளையிலும்
    ஒரு பட்டாம் பூச்சி
    பறக்கிறது...

    தன் துணையிருந்து பிரிந்த
    இணையினை தேடி
    எங்கெங்கெல்லாம் பறக்கிறது...

    அதன்
    பிஞ்சு நெஞ்சிலும்
    காதல் வலி தெரிகிறது,வேதனை படர்கிறது.

    ஓயாமல் சிறகு வேகமாய் அடிக்கிறது...
    தவிக்கிறது..

    மீண்டும் பறக்கிறது - அந்த
    பட்டாம் பூச்சி,
    தன் துணையினை தேடி
    இன்னுமொரு திசையில்..


    அ.வின்சன் றோய்
    மூதூர்

No comments:

Post a Comment