Monday, 13 September 2010

உன்னை காண மாட்டேனா ?


சட்டென்று பெய்துபோன மழையினிலே
சடுதியாய் எழுந்த
மண் வாசனை நீ ......

இப்படி ஒரு
பிரிவை நானும் கண்டதில்ல
என் உசிருக்குள்
கிளைமோரும் வெடிச்சதில்ல
மனசுக்குள் கைபோட்டு ரணத்தை கிண்டும்
ஒருபானை மது உண்டும்
உன் நினைவே திண்ணம் ............

என் முற்றத்தில்
பூத்திருந்தாய் வாசமில்லை ......
நான் நெடுதூரம்
வந்தபின்பு பூத்ததென்ன ???
சட்டென்று சிலுவையிலே
சடுதியாய் நீ
என் சகலதையும் அறைந்ததென்ன
இறுதியாய் நீ .............

முச்சந்தி
கழியும்வரை மறையாயே
என் முழுநிலவே
முகில் மேவி போனதென்ன ?
பிறையாயும்
உன்னை காண மாட்டேனா ?
சில்லறையாய் உன்
சிரிப்பிங்கு கேட்பேனா?  
                                                         அகிலன் குருஸ்

No comments:

Post a Comment